₹ 13.49 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ள குஷாக் Onyx எஸ்யூவி மாடல் 1.0 லிட்டர் TSI என்ஜினில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள ஏக்டிவ் மற்றும் ஆம்பியஷன் என இரு வேரியண்டுகளுக்கு மத்தியில் வெளியிட்டுள்ளது.
2023 வெளியிடப்பட்ட Onyx edition மாடலை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில் 114bhp மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் தற்பொழுது 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
பகல் நேர ரன்னிங் விளக்குடன் எல்இடி ஹெட்லேம்ப், கார்னரிங் ஃபாக் லேம்ப், டிஃபோகர் கொண்ட பின்புற வைப்பர், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், பேடல் ஷிஃப்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஆறு ஏர்பேக்குகளுடன் GNCAP குஷாக் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடலாக கிடைக்கின்றது. கூடுதலாக ஓனிக்ஸ் பேட்ஜ் பெற்ற தரை விரிப்புகள், ஸ்கஃப் பிளேட்டுகள், ஓனிக்ஸ் பேட்ஜ் மற்றும் ஓனிக்ஸ் தீம் மெத்தைகளையும் பெறுகிறது.
குஷாக்கில் 1.0 லிட்டர் என்ஜின் தவிர, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் வழங்கும் என்ஜின் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…