Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் ஸ்கோடா கோடியக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
4 October 2017, 12:13 pm
in Car News
0
ShareTweetSendShare

ரூ.34.49 லட்சம் ஆரம்ப விலையில் ஸ்கோடா கோடியக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் சவாலான விலையில் கோடியக் எஸ்யூவி வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்கோடா கோடியக்

ஸ்கோடா எட்டி எஸ்யூவி காருக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள 7 இருக்கைகளை கொண்ட ஸ்கோடா கோடியாக் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாடலாகும்.

டிசைன்

கோடியக் காரின் அளவுகள் 4,697 மிமீ நீளமும், 1,882 மிமீ அகலமும், 1,676 மிமீ உயரமும் ,  2,791 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. மேலும் இதன் கிரவுண்ட் கிளியரண்ஸ் 187 மிமீ மற்றும் 300 மிமீ உயரம் வரை உள்ள நீர் மிகுந்துள்ள இடங்களில் பயணிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முப்பரிமான ஸ்கோடா பாரம்பரிய  ரேடியேட்டர் கிரில் , அழகான எல்இடி ஹெட்லைட் விளக்குகளுடன் கூடிய பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் மற்றும் எல்இடி பனி விளக்குகள் என அனைத்து விளக்குகளும் எல்இடியை பெற்றுள்ளது. எல்இடி டெயில் விளக்குகள் , 18  அங்குல அலாய் வீல் , நேர்த்தியான பக்கவாட்டு புராஃபைல் கோடுகள் என மிக நேர்த்தியான அமைந்துள்ளது.

சிறப்பான ஃபீனிஷ் செய்யப்பட்டு சென்ட்ரல் கன்சோலில் ஸ்கோடா கனெக்ட் 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கலாம். மேலும் இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளை பெற்றதாக வந்துள்ளது.

எஞ்சின்

2.0 லிட்டர் டீசல் DQ500 எஞ்சின் பொருத்தப்பட்டு 3,500-4,000 rpm வேகத்தில்  அதிகபட்சமாக 148 ஹெச்பி ஆற்றல் மற்றும் 1,750-3,000 rpm வேகத்தில் 340 என்எம் வரை அதிகபட்சமாக டார்க்கினை வழங்கும். இதில் ஆற்றலை 4 சக்கரங்களும் எடுத்துச் செல்ல 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது..

ஸ்கோடா கோடியக் மைலேஜ் லிட்டருக்கு 16.25 கிமீ வரை கிடைக்க உள்ளது.

அதிகபட்சமாக 9 காற்றுப்பைகள் கொண்ட எஸ்யூவி மாடலாக விளங்க உள்ளது. மேலும் எலக்ட்ரிக் பார்க்கிங், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஆல் ரவுன்ட் பார்க்கிங் சென்சார், இஎஸ்பி, டிராக்‌ஷன் கன்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள பிரசத்தி பெற்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி, வோல்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி, மிட்ஷூபிசி பஜெரோ ஸ்போர்ட் மற்றும் இசுசூ MU-Xஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு இடையே கடுமையான சவாலினை கோடியக் ஏற்படுத்த உள்ளது.

கோடியக் விலை பட்டியல்

இந்தியாவில் ஸ்கோடா கோடியக் ரூ.34.49 லட்சத்தில் வெளியானது

Related Motor News

ஸ்கோடாவின் கைலாக் ஆன்ரோடு விலை மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள்

ரூ.7.89 லட்சத்தில் ஸ்கோடா Kylaq எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

இன்று கைலாக் எஸ்யூவியை வெளியிடும் ஸ்கோடா இந்தியா

கைலாக் மூலம் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் நுழையும் ஸ்கோடா

ஸ்கோடா குஷாக் ஸ்போர்ட்லைன் விற்பனைக்கு அறிமுகம்

ஸ்கோடா ஸ்லாவியா மான்டே கார்லோ எடிசன் அறிமுகமானது

Tags: Kodiaq suvSkoda
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ADAS பாதுகாப்புடன் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெளியானது

அடுத்த செய்திகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan