Automobile Tamilan

ஸ்கோடா குஷாக் ஸ்போர்ட்லைன் விற்பனைக்கு அறிமுகம்

2024 Skoda Kushaq sportline

ஸ்கோடா நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற குசா கெஸ்.வி காரில் கூடுதலாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஸ்போர்ட்லைன் வேரியண்டானது விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது. 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் எஞ்சின் என இரண்டிலும் கிடைக்கின்றது.

ஏற்கனவே குஷாக் சந்தையில் கிடைக்கின்ற மான்டோ கரோலா காரின் அடிப்படையிலான இந்த ஸ்போர்ட்லைன் வேரியண்டில் 17 அங்குல அலாய் கருமை நிறத்தில் கொடுக்கப்பட்டு ஸ்போர்ட்லைன் பேட்ஜிங் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. கூடுதலாக ரூப் ரெயில் ஸ்கஃ ப்ளேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருமை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இன்டீரியரை பொருத்தவரை இரண்டு விதமான வண்ண கலவைகள் கொடுக்கப்பட்டு பிளாக் மற்றும் பீஜ் நிறத்தை பெற்றிருக்கின்றது. அலுமினியம் பெடல்கள் முழுமையான எல்இடி ஹெட் லேம்ப், ஆட்டோ வைப்பர் உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களை பெறுகின்றது.

1.5 லிட்டர் TSI நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 147.5 bhp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்குகின்றது. இந்த காரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது.

1.0 லிட்டர் 114bhp மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

2024 Skoda Kushaq 1.0L Price list

2024 Skoda Kushaq 1.5L Price list

(ex-showroom)

Exit mobile version