Categories: Car News

மார்ச் 1.., ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 புக்கிங் ஆரம்பம்

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245

ரூபாய் 35 லட்சத்து 91 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ள ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245  பெர்ஃபாமன்ஸ் காருக்கான முன்பதிவு வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி முதல் துவங்குகின்றது. குறிப்பாக 200 யூனிட்டுகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ் 245 காரில் பொரத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜினின் மிகவும் சக்திவாய்ந்த பதிப்பைக் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 245 ஹெச்பி பவர் மற்றும் 370 என்எம் டார்க் (முந்தைய பதிப்பை விட 15 ஹெச்பி மற்றும் 20 என்எம் அதிகம்) வெளியிடுகிறது. 7 வேக DSG ஆட்டோ கியர்பாக்ஸை கொண்டுள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடல் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.6 விநாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது. அதே நேரத்தில் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆக உள்ளது.

முழுமையாக வடிவமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ள இந்த மாடலில் பச்சை, நீலம், வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு நிறங்ளை பெறுகின்றது.

மார்ச் 1 ஆம் தேதி பகல் 12 மணிக்கு www.buyskodaonline.co.in  என்ற முகவரி முன்பதிவு துவங்கப்படுகின்றது.