ஜெர்மனியில் நடைபெறுகின்ற IAA Mobility 2025 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எபிக் எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் எஸ்யூவி மாடல் 425கிமீ ரேஞ்சு வழங்கும் மாடலாக விளங்க உள்ள நிலையில் உற்பத்திக்கு 2026 ஆம் ஆண்டு எடுத்துச் செல்ல ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கிடைக்கின்ற காமிக் எஸ்யூவிக்கு இணையான விலையில் வரவுள்ள எபிக் ஆனது மிக சிறப்பான வகையில் ஸ்போர்ட்டிவ் சார்ந்த டிசைனை பெற்று எலக்ட்ரிக் கார்களில் ஸ்கோடா கொடுத்து வரும் டிசைனை பெற்றுள்ளது.
4.1 மீட்டர் நீளம் கொண்ட ஒரு சிறிய SUV கிராஸ்ஓவராக Epiq விளங்கும் நிலையில் ஐந்து இருக்கைகளை பெற்று மிக தாராளமான இடவசதியுடன், கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக 475 லிட்டர் பூட் வசதியை பெற்றிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பேட்டரி, பவர்டிரையின் சார்ந்த விபரங்களை தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், இந்நிறுவனம் WLTP ரேஞ்ச் அதிகபட்சமாக 425 கிமீ வரை கொண்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளதால், இது துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடலாக இருக்கும் என தெரிய வருகின்றது.
ஸ்கோடாவின் “Modern Solid” டிசைனை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கிராஸ்ஓவரில் கேஷ்மீர் மேட் வண்ண பளபளப்பான கருப்பு Tech-Deck தோற்றத்தை பெற்று T-வடிவ LED பகல்நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் டர்ன் இன்டிகேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்கள் கீழே அமர்ந்து, காஸ்மோ சாம்பல் நிறத்தில் முடிக்கப்பட்ட அதன் ஸ்பாய்லருடன் வலுவான முன் பம்பரை கொண்டு, ஒரு புதிய டொர்னாடோ கோடு பகுதிகளை பார்வைக்கு பிரிக்கிறது
இன்டீரியர் தொடர்பாக படங்களை எபிக் காருக்கு முன்பாக வெளியிட்டிருந்த நிலையில், எளிமையான தோற்ற அமைப்புடன் பல்வேறு நவீன வசதிகளை பெற்றிருக்கும், உற்பத்திக்கு 2026 ஆம் ஆண்டின் மத்தியில் எபிக் தயாராகுவதனால் அதற்கு முன்பாக உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.