கார் செய்திகள்

மாருதி சுசுகி ஜிம்னி எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், ஜிம்னி எஸ்யூவி காரை ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ள நிலையில் விற்பனைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது.

நான்காவது தலைமுறை ஜிம்னி சர்வதேச அளவில் சுசுகியின் ஜப்பான் ஆலையில் தயாரிக்கப்பட்டு 660சிசி என்ஜின் முதல் 1.5 லிட்டர் வரையிலான மாறுபட்ட என்ஜினை கொண்டு ஐரோப்பா உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. ஆஃப் ரோடு பிரியர்களுக்கு ஏற்ற பல்வேறு அம்சங்களை கொண்ட ஜிம்னி காரின் முகப்பு தோற்றம் கம்பீரமான கிரிலுடன் மிக நேரத்தியான பம்பரை கொண்டுள்ளது. இன்டிரியரில் தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

ஜிம்னி காரில் கே15பி 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட், எர்டிகா, எக்ஸ்எல் 6 மற்றும் சியாஸ் ஆகியவற்றில் கிடக்கின்றது. இது 102 ஹெச்பி பவருடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் முறையில் உள்ளன.

இரண்டாம் தலைமுறை ஜிம்னி இந்தியாவில் ஜிப்ஸி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் புதிய ஜிம்னி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் தற்போதைக்கு இல்லை என்பதே உறுதியான தகவலாக உள்ளது.

 

Share