Automobile Tamilan

டாடாவின் அல்ட்ரோஸ் கார் விற்பனைக்கு தயாராகிறது

டாடா அல்ட்ரோஸ்

பண்டிகை காலத்துக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ள டாடா மோட்டார்சின் அல்ட்ரோஸ் காரின் விளம்பர படப்பிடிப்புக்கான புகைப்படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில்  45X கான்செப்ட் என காட்சிப்படுத்தப்பட்டு, பிறகு இந்த ஆண்டின் 2019 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அல்ட்ரோஸ் என்ற பெயர் உறுதிப்படுத்தப்பட்டது.

அல்ட்ரோஸ் காரின் எதிர்பார்ப்புகள்

ஹாரியர் எஸ்யூவி மாடலை தொடர்ந்து டாடாவின் இம்பேக்ட் டிசைன் 2.0 அடிப்படையில் டிசைனிங் செய்யப்பட்டு அல்ட்ரோஸ் காரில் முதன்முறையாக இந்நிறுவன டாடா அல்ஃபா (ALFA Agile Light Flexible Advanced – ALFA) பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள முதல் மாடலாக விளங்க உள்ளது.

தொடர்ந்த பல்வேறு சமயங்களில் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், வர்த்தக விளம்பரத்திற்கான படப்படிப்பில் ஈடுபடும் புகைப்படங்கள் மறைக்கப்படாமல் முழுமையாக காட்சி தந்துள்ளது. குறிப்பாக இந்த காரில் இரு நிறத்திலான 17 அங்குல வீலுடன் ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்ற உற்பத்தி நிலை மாடல் அமைந்துள்ளது.

இன்டீரியர் அமைப்பில், மிதக்கும் வகையிலான டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்ம், டிஜிட்டல் கிளஸ்ட்டர் போன்றவற்றுடன் பல்வேறு டிஜிட்டல் நுட்பம் சார்ந்த அம்சங்களை கொண்டதாக ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளை வசதிகளுடன் இ-சிம் ஆதரவினை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

அல்ட்ரோஸ் காரில் இரண்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வினை கொண்டதாக அமைந்திருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்றவற்றை பெற்றதாக அமைந்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசுகி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் பெலினோ அடிப்படையிலான டொயோட்டா கிளான்ஸா போன்ற கார்களுக்கு மிகவும் சவாலாகவும் போட்டியாளர்களை விட குறைவான விலையிலும் அல்ட்ரோல் விற்பனைக்கு வரக்கூடும் என கருதப்படுகின்றது.

Exit mobile version