Categories: Car News

குறைந்த விலையில் சன்ரூஃப் வசதியுடன் டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம்

tata altroz gets sunroof

இந்திய சந்தையின் மிக குறைந்த விலையில் சன்ரூஃப் பெற்ற மாடலாக டாடா மோட்டாசின் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு ₹ 7.90 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சன்ரூஃப் அல்லாத மாடலை விட ரூ.45,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கின்றது.

சமீபத்தில் டாடா அல்ட்ராஸ் காரில் சிஎன்ஜி எரிபொருள் வசதி பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருந்தது. நடுத்தர XM+ வேரியண்டில் சன் ரூஃப் வசதி துவங்குகின்றது.

2023 Tata Altroz

1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. அதுவே CNG எரிபொருள் பெற்ற மாடல் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் சிஎன்ஜி எரிபொருள் மைலேஜ் 27Km/kg ஆகும்.

டர்போ அல்ட்ராஸ் காரில், .2 லிட்டர் டர்போ பெட்ரோல் 3 சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்.பி.எம்-மில் 90 BHP பவர் மற்றும் 1500-5000 ஆர்.பி.எம்-மில் 140 NM வெளிப்படுத்தும். இந்த ஐ-டர்போ பெட்ரோல் என்ஜில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Type 1.2 l Revotron 1.2 l I-Turbo 1.2 L iCNG 1.5 l Turbocharged Revotorq
Fuel Petrol Petrol Petrol + CNG Diesel
Fuel Efficiency 19.33 Km/l* 18.5 Km/l 27km/kg Diesel – 23.64 km/l*
Engine Capacity, No of Cylinders 1199 cc, 3 Cylinders 1199 cc, 3 Cylinders 1199 cc, 3 Cylinders 1497 cc, 4 Cylinders
Max Power (PS@rpm) 88 at 6000 (64.75 kW) 110 @ 5500(80.9kW) 73.5 ps @6000 (54 kW) 90 at 4000(66.2kW)
Max Torque (Nm@rpm) 115 at 3250 140 at1500 – 5500 103 at 3500 200 at 1250 – 3000

டாடா சன்ரூஃப் அல்ட்ராஸில் மிட்-ஸ்பெக் XM+ வேரியண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பெட்ரோல், டர்போ-பெட்ரோல், டீசல் மற்றும் CNG பவர் ட்ரெயின்களில் மொத்தம் 16 வகைகளில் கிடைக்கிறது.

2023 டாடா அல்ட்ராஸ் காரின் விலை ₹ 6.59 லட்சம் முதல் ₹ 10.74 லட்சம் வரை கிடைக்கின்றது.

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

5 hours ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

8 hours ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

1 day ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

1 day ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

1 day ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

1 day ago