இந்திய வாகன சந்தையில் 1991 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட முதல் எஸ்யூவி மாடாலாக சியரா வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது ஹாரியர், சஃபாரி, நெக்ஸான் மற்றும் பஞ்ச் என நான்கு எஸ்யூவிகளை விற்பனை செய்து வரும் நிலையில் ஒட்டுமொத்தமாக 20 லட்சம் விற்பனை எண்ணிக்கையை வெற்றிகரமாக கடந்துள்ளது.
தற்பொழுது அடுத்த கூபே ரக ஸ்டைல் பெற்ற எஸ்யூவி மாடலாக கர்வ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் மீண்டும் சியரா எலக்ட்ரிக் எஸ்யூவி 2025 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளதை உறுதி செய்துள்ளது.
King of SUV’s என்ற பெயரில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் (₹14.99 லட்சம்) மற்றும் சஃபாரி (₹15.49) ஆகியவற்றின் ஆரம்ப விலையை குறைத்துள்ளது. இந்த பிரபலமான எஸ்யூவி வகைகளில் ₹ 1.4 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை, நெக்ஸான்.ev, பன்ச்.இவி காருக்கு 1.3 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. அடுத்தப்படியாக ₹30,000 வரை பலன்களை 7 லட்சம் நெக்ஸான்களின் 7 இன் 7 கொண்டாட்டத்தின் பேரில் வழங்குகின்றது.
டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் தலைமை வர்த்தக அதிகாரி திரு.விவேக் ஸ்ரீவத்சா, “ எஸ்யூவி சந்தையை புரிந்துகொண்டு ஒவ்வொரு வாடிக்கையாளர் தேவைக்கும் சரியான தயாரிப்பை வழங்குவதில் எங்களின் திறன், நிலைத்தன்மையையும் மேலாதிக்கத்தையும் பராமரிக்க எங்களுக்கு பெரிதும் உதவுகிறது. எங்கள் மல்டி பவர்டிரெய்ன் மூலோபாயத்தால் ஆதரிக்கப்பட்டு, வலுவான, பாதுகாப்பான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உலகத் தரம் வாய்ந்த எஸ்யூவிகளை இந்திய நுகர்வோருக்கு வழங்குவதே எங்கள் அணுகுமுறையாகும். 2 மில்லியன் விற்பனை சாதனை இதற்கு ஒரு சான்றாகும் என தெரிவித்துள்ளார்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…