Automobile Tamilan

எலக்ட்ரிக் கார்களுக்கு பிரத்தியேக டாடா.இவி ஷோரூம் துவக்கம்

Tata Motors EV showroom

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சியாக பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே என பிரத்தியேகமான இரண்டு ஷோரூம்களை குருகிராம் மற்றும் செக்டார் 14 என தேசிய தலைநகர் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.

பிரத்தியகமாக அதிக எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்ற பகுதிகளில் துவங்கப்பட்டுள இந்த ஷோரூமில் நெக்ஸான் EV, டிகோர் EV டியோகோ EV மற்றும் வரவிருக்கும் ஹாரியர் EV,  பஞ்ச் EV, கர்வ் EV ஆகியவை மற்றும் எதிர்கால மின்சார வாகனங்கள் மட்டும் கிடைக்கும்.

TATA.ev ஸ்டோர்கள் ஜனவரி 7, 2024 முதல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட உள்ளன. இந்த ஷோரூம்கள் பாரம்பரிய 4-சக்கர வாகன ஷோரூம்களில் இருந்து விலகி நவீன தொழில்நுட்பங்களை கொண்டதாக விளங்கும்.

நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா, EV நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் புரிந்துகொள்வதில் டாடா நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். “புதிய ஃபிளாக்ஷிப் ஷோரூம்கள் பிராண்டின் தனித்துவமானதாகும். இந்த ஷோரூம்களை சில்லறை விற்பனை நிலையங்களாக மட்டுமல்லாமல் குருகிராமில் உள்ள TATA.ev சமூக மையங்களாகவும் விளங்கும் என குறிப்பிட்டார்.

டாடா இவி சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவை பிரிவு தலைவர் விவேக் ஸ்ரீவத்சா கூறுகையில், TATA.ev ஸ்டோர்களில் மறுவடிவமைக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் ஒவ்வொரு அம்சமும் டிஜிட்டல் மற்றும் மனித கூறுகளை இணைத்து, தனித்துவமாக மறக்கமுடியாத கார் வாங்கும் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சென்னை உட்பட பல்வேறு பெருநகரங்களில் அடுத்த சில மாதங்களில் இந்த டீலர்கள் துவங்கப்பட உள்ளது.

Exit mobile version