Automobile Tamilan

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.!

tata safari suv

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிகளில் புதியதாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிட வாயுப்புள்ளது.

அதற்கு முன்பாக இன்றைக்கு முக்கிய தகவல் வெளியாகவுள்ள புதிய டாடா சியரா எஸ்யூவி மாடலிலும் இதே 170hp பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற உள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கலாம்.

ஆட்டோ எக்ஸ்போ 2023 ஆம் ஆண்டில் முதன்முறையாக டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்திய இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் முன்பு இந்நிறுவனம் குறிப்பிட்டிருந்த தகவலின்படி 170hp at 5,000rpm மற்றும் 280Nm டார்க் ஆனது 2,000-3,500rpmல் வழங்கலாம் என கூறியிருந்தது. இதனால் புதிய ஹாரியர் மற்றும்  சஃபாரி மாடல்கள் விலை ரூ.13 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது.

குறைந்த விலையில் துவங்குவதுடன் பெட்ரோலில் கிடைக்க உள்ளதால் தேசிய தலைநகர் பகுதி மற்றும் டெல்லி ஆகியவற்றில் கூடுதல் வரவேற்பினை பெறக்கூடும். அதேநேரத்தில் போட்டியாளர்கான எக்ஸ்யூவி 700, எம்ஜி ஹெக்டர், உள்ளிட்ட மாடல்களுடன் விக்டோரிஸ், க்ரெட்டா, கிராண்ட் விட்டாரா போன்றவற்றுக்கு சவாலாக இருக்கும்.

Exit mobile version