டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற நெக்ஸான்.இவி காரில் கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளில் தற்பொழுது பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுத்து வரும் லெவல்-2 ADAS அம்சத்தை பெற உள்ளது.
சந்தையில் நெக்ஸான்.இவி அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் 45kWh மற்றும் 30kWh என இரு விதமான பேட்டரியை பெற்றுள்ளது. தற்பொழுது டாப் வேரியண்ட் Empowered+ விற்பனையில் உள்ள நிலையில் கூடுலாக ADAS பெறுவதனால் Empowered+ A என்ற வேரியண்ட் பெறக்கூடும்.
குறிப்பாக கர்வ்.இவி காரில் உள்ளதை போன்றே அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் புறப்பாடு எச்சரிக்கை மற்றும் லேன்-கீப் அசிஸ்ட், முன்புற மோதல் எச்சரிக்கை மற்றும் ஆட்டோமேட்டிக் அவசரகால பிரேக்கிங், ஆட்டோ ஹை பீம் அசிஸ்ட், போக்குவரத்து அடையாளங்களை கண்டு செயல்படுவது, பின்புற போக்குவரத்து மற்றும் மோதல் எச்சரிக்கை மற்றும் ஓட்டுநர் தூக்கத்தை கண்டறிந்து எச்சரிக்கை வசதி ஆகியவற்றை அட்வாண்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தின் மூலம் பெற உள்ளது.
489km MIDC சான்றிதழ் பெற்றுள்ள 45kWh மற்றும் 30kWh பேட்டரி ஆனது 275KM ஆக சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் புதிதாக வரவுள்ள அடாஸ் பெற்ற டாப் வேரியண்ட் புதிய சிவப்பு நிறத்தை பெறக்கூடும், மேலும் விலை ரூ.18 லட்சத்துக்குள் அமையலாம்.
உதவி – X/Motor Arena India