விற்பனையில் உள்ள நெக்ஸான் EV Max டார்க் எடிசனில் இடம்பெற்றிருந்த 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை நெக்ஸான் EV MAX XZ+ LUX வேரியண்டில் பொருத்தி ரூ.18.79 லட்சம் (3.3kW) மற்றும் ரூ.19.29 லட்சம் (3.3kW) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நெக்ஸான் EV மேக்ஸ் காரின் பவர் 141bhp மற்றும் 250Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 40.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 453 கிமீ பயணிக்கலாம்.
இதில் உள்ள 3.3kW சார்ஜர் பயன்படுத்தி, 15 மணிநேரத்தில் பேட்டரியை 10-100 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். அடுத்து 7.2kW சார்ஜர், 0-100 சதவிகிதம் சார்ஜ் செய்ய 6.5 மணிநேரம் ஆகும். நெக்ஸான் EV Max டார்க் ஆனது 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் திறன் கொண்டது. இதில் 56 நிமிடங்களில் 0-80 சதவிகிதம் பேட்டரியை நிரப்புகிறது.
நெக்ஸான் எலக்ட்ரிக் காரில் 10.25 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஹர்மானில் இருந்து பெறப்பட்ட உயர்தர எச்டி டிஸ்ப்ளே உடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பினை கொண்டு புதிய UI பெற்றதாக வந்துள்ளது. முன்பாக சஃபாரி மற்றும் ஹாரியர் டார்க் எடிசன் கார்களில் இந்த சிஸ்டம் கொண்டு வரப்பட்டது.
இது 6 மொழிகளில் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி மற்றும் 6 மொழிகளில் ( தமிழ், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு மற்றும் மராத்தி) 180+ குரல் கட்டளைகளுடன் வருகிறது.