டாடா டிகோர் மின்சாரக் காரின் விலை ரூ.80,000 குறைந்தது

tata tigor ev

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை மின்சார கார் மாடலில் ஒன்றான டாடா டிகோர் EV விலை ஜிஎஸ்டி வரி குறைப்பின் காரணமாக 80 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி எனப்படுகின்ற சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதமாக குறைத்துள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மின்சார வாகனங்களும் விலை குறைய உள்ளது. எனவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விலையை குறைத்துள்ளது. சமீபத்தில் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏத்தர் தனது மாடல்களின் விலையை ரூ.8,000-ரூ.9,000 வரை குறைத்திருந்தது.

டிகோர் மின்சார கார் ரேஞ்ச் மற்றும் செயல்திறன்

டாடா மோட்டார்ஸ், தற்போது வர்த்தகரீதியான பயணாளர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வருகின்ற டிகோர் EV காரில் 16.2 கிலோவாட் பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றது, இது 30 கிலோவாட் (41 hp) பவரை 4,500 ஆர்.பி.எம் சுழற்சியிலும், 105 Nm டார்க் 2,500 ஆர்.பி.எம்மில் வெளிப்படுத்துகின்றது. 72 வோல்ட், 3-கட்ட ஏசி இன்டெக்‌ஷன் மோட்டார் மூலம் முன் சக்கரங்களுக்கு பவரை அனுப்புகிறது.

இந்த காரில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி திறன் மூலம் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக  142 கிமீ வரை பயணிக்கலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு நிலையான ஏசி சார்ஜர் வழியாக 6 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும், ஒரு டிசி 15 கிலோவாட் வேகமான சார்ஜர் வாயிலாக இதனை 90 நிமிடங்களில் பெற முடியும்.

இரண்டு விதமாக வழங்கப்பட்டுள்ள வேரியண்ட் டிகோர் EV XM மற்றும் டிகோர் EV XT ஆகும். இரண்டிலும் பொதுவாக AIS-145 அடிப்படை பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப இரட்டை முன் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பின்புற பார்க்கிங் சென்சார்கள் இருக்கை பட்டை நினைவூட்டல் போன்றவை இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள பெட்ரோல் , டீசல் மாடல்களில் உள்ள XM, XT அடிப்படையில் வந்துள்ள இந்த எலெக்ட்ரிக் வெர்ஷனில் 14 அங்குல அலாய் வீல், ஹார்மன் நிறுவன 2 டின் ஆடியோ சிஸ்டத்துடன் புளூடூத், யூ.எஸ்.பி மற்றும் ஆக்ஸ் தொடர்புகள், பவர் விண்டோஸ் மற்றும் பவர் விங் மிரர் போன்றவற்றை கொண்டுள்ளது.

டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விலை பட்டியல்

டாடா Tigor EV XM – ரூ.9.96 லட்சம்

டாடா Tigor EV XT – ரூ.10.30 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் மும்பை)

டிகோருக்கு வழங்கப்பட்டுள்ள ஃபேம் இரண்டாம் கட்ட ஊக்கத் தொகை ரூ.1.62 லட்சம் வழங்கப்பட்டுகின்றது. ஊக்க தொகை பெறாமல் காரின் விலை டிகோர் EV XM மாடல் ரூ.10.99 லட்சம் எனவும், டிகோரின் EV XT விலை ரூ.11.09 லட்சம் ஆகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்த 18 மாதங்களுக்கு நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி உட்பட நான்கு மின்சார கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Exit mobile version