Automobile Tamilan

இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஆலை எங்கே அமையலாம் ?

tesla india plant

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனம், இந்திய சந்தையில் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை உள்நாட்டிலே தயாரிக்க தொழிற்சாலையை நிறுவுவதற்காக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tesla Plant India

மீண்டும் இந்தியாவில் தனது டெஸ்லா கார்களை விற்பனை செய்ய எலான் மஸ்க் மிக தீவரமான செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

டெஸ்லா இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு என பிரத்தியேக ஒரு தொழிற்சாலையை நிறுவ முன்மொழிந்துள்ளது. கூடுதலாக, EVகளுக்கான பேட்டரி உள்நாட்டிலே உற்பத்தி மேற்கொள்ள விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. எந்தவொரு உறுதியான முடிவுகளையும் எடுப்பதற்கு முன், உள்ளூர் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை ஆராய்ந்து  பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விவாதங்கள் தனிப்பட்ட தகவலாகவே உள்ளது.

ஆனால் டெஸ்லா இந்திய ஆலை தொடர்பான எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை. மேலும் எந்த மாநிலத்தில் ஆலை துவங்கப்படும் என்பது குறித்தும் தகவல் இல்லை.

முந்தைய ஆண்டு டெஸ்லா தனது கார்களை இந்தியாவில் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட கார்களாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்ட நிலையில், இறக்குமதி வரியை குறைக்க இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அரசு மறுத்ததை தொடர்ந்து தற்காலிகமாக தனது இந்திய செயல்பாட்டை நிறுத்தியிருந்தது.

தற்பொழுது டெஸ்லா நிறுவனத்துக்கு அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி என மூன்று நாடுகளில் தொழிற்சாலை உள்ளது. இந்தியாவில் தொழிற்சாலை துவங்கப்பட்டால் நான்காவது டெஸ்லா தயாரிப்பு ஆலையாக இருக்கும்.

source

Exit mobile version