கூடுதல் ஆக்செரீஸ் பெற்ற டொயோட்டா நிறுவன கேம்ரி ஸ்பிரிண்ட் எடிசனில் அடிப்படையான வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஹைபிரிட் நுட்பத்தை பெற்றதாக இந்தியாவின் பிரீமியம் செடான் சந்தையில் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டதாக விளங்குகின்றது.
Elegance வேரியண்டின் அடிப்படையில் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் முன் மற்றும் பின்புற பம்பர்களில் ஸ்போர்ட்டிவ் எக்ஸ்டென்ஷன், ஸ்போர்ட்டிவ் ஸ்பாயல்ர் பெற்று 18-இன்ச் அலாய் வீல்களும் கருப்பு நிறத்துடன் கேம்ரி ஸ்பிரிண்ட் பதிப்பில் உட்புறத்தில் சுற்றுப்புற விளக்குகள் மற்றும் புட்டில் விளக்குகள் உள்ளன.
கேம்ரி காரில் தொடர்ந்து 2.5 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் இரண்டு மின்சார மோட்டார் பெற்று முன்பக்க வீல் டிரைவ் மாடல் 225hp மற்றும் 220 Nm வழங்குகின்றது. இந்த செடானில் eCVT கியர்பாக்ஸ் உடன் Eco, Sport, மற்றும் Normal என மூன்று டிரைவிங் மோடுகளை கொண்டதாக வந்துள்ளது. மேலும் மைலேஜ் லிட்டருக்கு 25.49 கிமீ என சான்றிதழ் பெற்றுள்ளது.
பாதுகாப்பில் டொயோட்டா சேஃப்டி சென்ஸ் 3.0 மூலம் மோதலுக்கு முந்தைய எச்சரிக்கை, டைனமிக் ரேடார் குரூஸ் கட்டுப்பாடு, லேன் புறப்பாடு எச்சரிக்கை மற்றும் லேன் டிரேசிங் உதவி, 9 SRS ஏர்பேக்குகள், வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு, இழுவை கட்டுப்பாடு, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கட்டுப்பாடு, பிரேக் ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் 360° பனோரமிக் வியூ மானிட்டர் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது.
டொயோட்டா கேம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் விலை ரூ.48.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த காரில் எமோஷனல் ரெட், பிளாட்டினம் பேரல் வெள்ளை, சிமென்ட் கிரே, பிரீசியஸ் மெட்டல் மற்றும் டார்க் ப்ளூ மெட்டாலிக் என 5 நிறங்கள் உள்ளது.