Automobile Tamilan

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா லீடர்ஷிப் எடிசன் விற்பனைக்கு வெளியானது

65360 toyota innova crysta leadership edition

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்த இன்னோவா கார் வெளியுடப்பட்ட 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு சிறப்பு லீடர்ஷிப் எடிசனை இன்னோவா கிரிஸ்டா காரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

விற்பனையில் உள்ள VX டாப் வேரியண்டின் அடிப்படையில் வந்துள்ள இந்த மாடல் ஆனது பல்வேறு தோற்ற அமைப்பின் மாற்றங்கள் மற்றும் 360 டிகிரி சுற்றுப்புற கேமரா, ஆட்டோ ஃபோல்டிங் ORVM பெற்றுள்ளதால் ரூபாய் 62,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மற்றபடி தோற்றத்தினை பொறுத்தவரை, சிவப்பு நிறத்தைப் பெற்று மேற்கூரை கருப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்தைப் பெற்று மேற்கூரை கருப்பு நிறம் என இருவிதமான நிறங்களை கொண்டுள்ளது. லீடர்ஷிப் பதிப்பு பேட்ஜ் ஃபெண்டரில் பெறுகிறது மற்றும் இன்டிரியரில் கருப்பு நிறத்தைப் பெறுகின்றது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா லீடர்ஷிப் பதிப்பில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 2.4 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 150 ஹெச்பி பவர் மற்றும் 343 என்எம் டார்க்கை வழங்குகின்றது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. மற்றபடி பெட்ரோல் என்ஜின், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் வழங்கப்படவில்லை.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா லீடர்ஷிப் எடிசன் விலை ரூ.21.21 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Exit mobile version