Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
Toyota urban cruiser: டொயோட்டா அர்பன் க்ரூஸர் விற்பனைக்கு வந்தது - Automobile Tamilan

டொயோட்டா அர்பன் க்ரூஸர் விற்பனைக்கு வந்தது

bb3b0 toyota urban cruiser

இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் மற்றொரு மாடலாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் விலை ரூ.8.40 லட்சம் முதல் ரூ.11.30 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாகும்.

இந்திய சந்தையில் டொயோட்டா-சுசுகி கூட்டணியில் வெளியான பலேனோ அடிப்படையிலான கிளான்ஸா சீரான விற்பனையை பதிவு செய்து வருகின்றது. தற்போது இரண்டாவது மாடலாக இந்த எஸ்யூவி விளங்க உள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா அடிப்படையிலான அதே இன்ஜினை பெறுகின்ற அர்பன் க்ரூஸரில் டீசல் இன்ஜின் வழங்கப்படாமல் பெட்ரோல் இன்ஜின் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் SHVS ஹைபிரிட் நுட்பத்துடன் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது.

அர்பன் க்ரூஸர் காரின் பெட்ரோல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 17.03 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.76 கிமீ ஆகும்.

இன்டிரியரின் டேஸ்போர்டு மற்றும் கேபின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. டொயோட்டா லோகோ மட்டும் இணைக்கப்பட்டு பிரெஸ்ஸாவின் கருப்பு நிற அப்ஹோல்ஸ்ட்ரிக்கு பதிலாக பிரவுன் நிறத்தை பெற்றுள்ளது. இன்டிரியரில் கருப்பு – பிரவுன் நிறத்தை கொண்டுள்ளது. 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை கொண்டுள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டியரிங் மவுன்டேட் ஆடியோ கன்ட்ரோல், மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள் உள்ளது.

தோற்ற அமைப்பினை பொறுத்தவரை, விட்டரா பிரெஸ்ஸா காரின் முகப்பு அமைப்பில், வழக்கமான டொயோட்டாவின் எஸ்யூவி கார்களுக்கு உரித்தான முன்புற ஸ்லாட் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. பனி விளக்கு அறை மட்டும் விட்டாரா பிரெஸ்ஸா காரிலிருந்து மாறுபட்டுள்ளது. மற்றபடி, பனி விளக்குகள், எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி டெயில் லைட் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.

பாதுகாப்பு சார்ந்த அமைப்பில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ரியர் வியூ கேமரா போன்றவை உள்ளது. டொயோட்டா நிறுவனம் இந்த காருக்கு மூன்று வருடம் அல்லது 1,00,000 கிமீ வாரண்டி வழங்கப்படுகின்றது. இன்று முதல் ஆன்லைன் மற்றும் டீலர்கள் வாயிலாக ரூ.11,000 செலுத்தி முன்பதிவு மேற்கொள்ளலாம்.

இந்த எஸ்யூவி மாடலில் மிட், ஹை மற்றும் பிரீமியம் என மூன்று வேரியண்டுகளை பெற்றுள்ளது. இந்த காருக்கு போட்டியாக விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், வென்யூ, எக்ஸ்யூவி300 மற்றும் டாடா நெக்ஸான் போன்றவை உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் விலை பட்டியல்

விட்டாரா பிரெஸ்ஸா காரை விட ரூ.5500 வரை விலை கூடுதலாக டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர் விலை அமைந்துள்ளது.

Toyota Urban Cruiser விலை (விற்பனையகம் டெல்லி)
வேரியண்ட் Urban Cruiser MT Urban Cruiser AT
Urban Cruiser Mid ரூ.8.40 லட்சம் ரூ.9.80 லட்சம்
Urban Cruiser High ரூ.9.15 லட்சம் ரூ.10.65 லட்சம்
Urban Cruiser Premium ரூ.9.80 லட்சம் ரூ.11.30 லட்சம்
Exit mobile version