இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி வெளியிட உள்ள முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eVX கான்செப்ட் அடிப்படையிலான மாடல் உற்பத்தி நிலையை எட்டிய நிலையில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பேட்டரி, ரேஞ்ச் மற்றும் அறிமுகம் எப்பொழுது போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
2023 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக கான்செப்ட் நிலை மாடலாக காட்சிக்கு வந்து இவிஎக்ஸ் க்ராஸ்ஓவர் ரக ஸ்டைலை பெற்ற மாடலின் உற்பத்தி நிலை கார் எலக்ட்ரிக் மாடலாக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்திய மட்டுமல்லாமல் பல்வேறு வெளியாடுகளிலும் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சுசூகி ஆலையில் தயாரிக்கப்பட்டு இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் உற்பத்தி நிலை மாடல் காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது. எனவள, அதனை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் விற்பனையை இந்திய சந்தையில் மாருதி துவங்கலாம்.
புதிய eVX எஸ்யூவி காரில் 50- 60kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சுமார் 500 கிமீ முதல் 600 கிமீ தொலைவு பயணிக்கும் ரேஞ்சு கொண்டிருக்கும் என்று மாருதி அறிவித்துள்ளது. இரண்டாவதாக குறைந்த 48kWh பேட்டரி அதிகபட்சமாக 350- 400 கிமீ வரம்பினை வழங்கலாம். eVX எஸ்யூவி காரின் பரிமாணங்கள் 4,300 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம் மற்றும் 1,600 மிமீ உயரம் கொண்டதாக இருக்கும் என்று மாருதி குறிப்பிட்டுள்ளது.
இந்திய சந்தையில் வரவிருக்கும் மஹிந்திரா XUV-e8, ஹூண்டாய் கிரெட்டா இவி, ஹாரியர் இவி உட்பட விற்பனையில் உள்ள எம்ஜி ZS EV மாடலுக்கு கடும் சவாலினை மாருதி eVX ஏற்படுத்த உள்ளது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…