Automobile Tamilan

புதிய நிறத்தில் 2024 ஹீரோ கிளாமர் 125 விற்பனைக்கு அறிமுகமானது

2024 hero glamour 125cc

2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய கிளாமர் 125cc மாடலில் புதிய பிளாக் மெட்டாலிக் சில்வர் நிறம் மட்டும் சேர்க்கப்பட்டு கூடுதலாக பாடி கிராபிக்ஸ் ஆனது மேம்படுத்தப்பட்டிருக்கின்றது.

மற்றபடி, மெக்கானிக்கல் மற்றும் வசதிகள் சார்ந்தவற்றில் எந்த ஒரு மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை மேலும் முந்தைய மாடலை விட ₹ 1000 வரை விலை உயர்த்தப்பட்டு தற்பொழுது 86,598 (ex-showroom) ஆக தொடங்குகின்றது.

E20 ஆதரவினை பெற்ற 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7,500 rpm-ல் 10.7 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

கிளாமர் 125cc மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு மற்றும் பின்புற ட்வீன் ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு 18 அங்குல அலாய் வீல் கொண்டுள்ள இந்த பைக்கில் 80/100-பிரிவு முன்புற டயரும் மற்றும் 100/80-பிரிவு பின்புற டியூப்லெஸ் டயர் உள்ளது. முன்புற டயரில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் மற்றும் பின்புற டயரில் 130 மிமீ டிரம் இணைக்கபட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொடுத்துள்ளது.

முந்தைய நிறங்களான பிளேசிங் சிவப்பு, நீலத்துடன் கருப்பு, சிவப்பு உடன் கருப்பு என தற்பொழுது நான்கு நிறங்களில் இந்த மாடல் கிடைக்கின்றது.

மற்றபடி டிஜிட்டல் கிளஸ்டர் ஆனது பெற்று எல்இடி ஹெட்லைட், டெயில் லைட் கொண்டுள்ளது.

(Ex-showroom Tamil Nadu)

Exit mobile version