Auto News

2024 டாடா பஞ்ச் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

2824 tata punch suv

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான பிரபலமான பஞ்ச் (Punch) துவக்க நிலை சந்தைக்கு ஏற்ற எஸ்யூவி ஆரம்ப விலை ரூபாய் 6.13 லட்சம் முதல் ரூபாய் 10.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

GNCAP-யின் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ள டாடா பஞ்ச் எஸ்யூவி ALFA (Agile Light Flexible Advanced) பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின் விருப்பங்களில் எந்த மாற்றமும் இல்லாமல், தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற பஞ்சில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 3 சிலிண்டர் கொண்ட மாடல் அதிகபட்சமாக 86 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனில் 74PS பவர் வெளிப்படுத்துகின்றது.

துவக்க நிலை பிரிவில் முதல் மாடலாக 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஒருங்கிணைப்பு வசதி மற்றும் USB Type-C ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட புதிய அம்சங்களைப் பெற்றுள்ளது.

புதிய பஞ்ச் காரில் Pure, Pure (O), Adventure, Adventure Rhythm, Adventure S, Adventure+ S, Accomplished+, Accomplished+ S, Creative+, மற்றும் Creative+ S போன்ற வேரியண்டுகள் உள்ளது.

2024 டாடா மோட்டார்ஸ் பஞ்ச் எஸ்யூவி விலை ரூ.6.13 லட்சம் முதல் துவங்குகிறது.