Automobile Tamilan

இந்தியா வரவிருக்கும் வின்ஃபாஸ்ட் VF e34 அறிமுக விபரம்

தூத்துக்குடியில் துவங்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் தொழிற்சாலையில் முதற்கட்டமாக VF e34 எலக்ட்ரிக் எஸ்யூவி தயாரிக்கப்பட உள்ளதால் இந்த மாடலை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய பேட்டரி, ரேஞ்ச் உட்ப்பட முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.

4.3 நீளமுள்ள இ34 மாடல் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் CKD எனப்படுகின்ற பாகங்களை தருவித்து ஒரங்கிணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், ஆலை முழுமையான பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 2025ல் தயாராகும் பொழுது இந்தியாவிலே முழுமையாக தயாரிக்கப்பட உள்ளது.

vinfast vf e34

Vinfast VF e34 SUV

5 இருக்கைகளை பெற்றுள்ள கிராஸ்ஓவர் ஸ்டைபெற்ற VF e34 எஸ்யூவி மாடலில் 42kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் 110 kW or 147 HP பவர் மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 318 கிமீ ரேஞ்ச் வழங்கும் என  NEDC  சான்றிதழ் பெற்றுள்ளது. 180 கிமீ பயணிக்க சார்ஜிங் பெற விரைவு சார்ஜரில் 18 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றது.

இந்தியாவில் வின்ஃபாஸ்டின் செயல்பாடுகளுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கும் வகையில் மிகச் சிறப்பான ரேஞ்ச் வழங்கும் மாடலாகவும், குறைந்த விலையுடன் முதல் ஆண்டில் 50,000 யூனிட்களின் உச்ச உற்பத்தி திறனை அடைய உதவும் என்று நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

Exit mobile version