Automobile Tamilan

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

vinfast vf7 electric car rearவரும் ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தயாரிக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் VF6, VF7 மின்சார கார்களுக்கான முன்பதிவை அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்ட டீலர்கள் பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் உட்பட பிற மாநிலங்களில் டெல்லி, குருகிராம், நொய்டா, பெங்களூரு, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர், அகமதாபாத், கொல்கத்தா, கொச்சின், புவனேஷ்வர், திருவனந்தபுரம், சண்டிகர், லக்னோ, சூரத், காலிகட், விசாகப்பட்டினம், விஜயவாடா, சிம்லா, ஆக்ரா, ஜான்சி, குவாலியர், வாபி, பரோடா மற்றும் கோவா என முதற்கட்டமாக 27 நகரங்களில் 32 டீலர்களை சுமார் 13 குழுமங்கள் வாயிலாக துவங்குகின்றது.

மேலும், 2025 ஆண்டின் இறுதிக்குள் சுமார் 35 டீலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

அதன் டீலர்ஷிப் நெட்வொர்க்குடன் கூடுதலாக, வின்ஃபாஸ்ட் அதன் இந்திய சேவை மற்றும் சார்ஜிங் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறது. சாலையோர உதவி, வாடிக்கையாளர் சேவை மற்றும் மொபைல் சேவைக்காக குளோபல் அஷ்யூர் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் EV சார்ஜிங் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை உள்கட்டமைப்பிற்காக myTVS மற்றும் RoadGrid உடன் இணைந்து செயல்படுகிறது. பேட்டரி மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டு முயற்சிகளை ஆதரிக்க வின்ஃபாஸ்ட் மேலும் பேட்எக்ஸ் எனர்ஜிஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

Exit mobile version