Automobile Tamilan

ரூ.20.89 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF7 எலக்ட்ரிக் கார் வெளியானது

vinfast vf7 car

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தயாராகின்ற வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் VF7 மற்றும் vf6 எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் உடனடியாக டெலிவரி வழங்கப்பட உள்ளது.

Vinfast VF7 எலக்ட்ரிக் காரின் பேட்டரி, ரேஞ்ச் விபரம்

ரூ.20.89 லட்சம் முதல் துவங்குகின்ற வின்ஃபாஸ்டின் VF7 மின்சார காரில் 59.6 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு ஈகோ வேரியண்டில் 177 PS பவர் மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், பிளஸ் மாடல் பவர் 204 PS மற்றும் 310 Nm டார்க் வழங்குகின்றது.

70.8 kWh பேட்டரி பேக்கினை FWD மற்றும் AWD டிரிம்களில் கிடைக்கிறது. FWD அமைப்பில் 201 PS மற்றும் 310 Nm டார்க் வெளிப்படுத்த ஒற்றை மோட்டார் உள்ளது, அதே நேரத்தில் AWD வேரியண்டில் 354 PS மற்றும் 500 Nm டார்க் டூயல் மோட்டார் வெளிப்படுத்துகின்றது.

Variants Price list
Earth FWD 59.6 kWh Rs 20.89 lakh
Wind FWD 59.6 kWh Rs 23.49 lakh
Wind Infinity FWD 59.6 kWh Rs 23.99 lakh
Sky AWD 70.8 kWh Rs 24.99 lakh
Sky Infinity AWD 70.8 kWh Rs 25.49 lakh

அறிமுக சலுகையாக இந்நிறுவனத்தின் VGreen சார்ஜரில் ஜூலை 2028 வரை இலவச சார்ஜிங்கை வழங்குகிறது, அதோடு 3 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு மற்றும் பனோரமிக் சன்ரூஃப் இலவச கர்டெயின் வழங்கப்படுகின்றது.

தொடுதிரை சார்ந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று பல்வேறு கனெக்ட்டவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அடிப்படையாக 7 ஏர்பேக்குகளை பெற்று லெவல்-2 ADAS பெற்றதாக கிடைக்கின்றது.

Exit mobile version