புதுப்பிக்கப்பட்ட வசதிகளை பெற்ற ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி காரின் அடிப்படையில் டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் மற்றும் ஜிடி லைன் என மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜிடி வரிசையில் டைகன் மாடலில் தற்பொழுது எட்ஜ், சவுண்ட், ஸ்போர்ட், க்ரோம் எடிசன் ஆகியவை விற்பனைக்கு கிடைக்கின்றது.
டைகன் ஜிடி பிளஸ் வேரியண்டில் ஸ்மோக்டூ எல்இடி ஹெட்லேம்ப் பெற்று கார்பன் ஸ்டீல் கிரே நிறத்தை பெற்றுள்ள கிரில், ஃபெண்டர் மற்றும் பின்புறத்தில் சிவப்பு நிறத்திலான GT லோகோ, கருமை நிற கதவு கைப்பிடிகள்; மற்றும் சிவப்பு பிரேக் காலிப்பர் பெற்றும் பல்வேறு இடங்களில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜிடி பிளஸ் காரின் இன்டிரியரில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பல்வேறு இடத்தில் சிவப்பு நிறத்தில் ஸ்டிச்சிங் செய்யபட்ட நூல்கள் மற்றும் ஜிடி லோகோ பேட்ஜ் பெற்றதாக அமைந்துள்ளது.
இந்த வேரியண்டில் 1.5-லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் மட்டும் பெற்றதாக அமைந்துள்ளது. அதிகபட்சமாக 150 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் அல்லது 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
ஜிடி லைன் வேரியண்டில் சிவப்பு நிற பேட்ஜிங் நீக்கப்பட்டு ஜிடி லைன் பல்வேறு இடங்களில் நீக்கப்பட்டு, மற்றபடி ஜிடி பிளஸ் ஸ்போர்ட் போல அமைந்துள்ளது.
இந்த வேரியண்டில் 1.0-லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் மட்டும் பெற்றதாக அமைந்துள்ளது. அதிகபட்சமாக 114bhp பவர் மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் அல்லது 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் விலை அடுத்த சில வாரங்களுக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது. மேலும் இந்தியாவில் தனது முதல் BEV வாகனமாக ID.4 மாடலை விற்பனைக்கு நடப்பு ஆண்டின் இறுதியில் வெளியிட உள்ளது.