Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சிட்ரோயன் ஏர்கிராஸ் X விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

by MR.Durai
6 October 2025, 8:52 am
in Citroen
0
ShareTweetSend

Citroen Aircross x suv

சிட்ரோயன் இந்தியா நிறுவனத்தின் 5 மற்றும் 5+2 என இருக்கை ஆப்ஷனை பெற்ற ஏர்கிராஸ் எக்ஸ் எஸ்யூவி ஆன்-ரோடு விலை ரூ.9.99 லட்சம் முதல் துவங்கி ரூ.17.15 லட்சம் வரை அமைந்துள்ள நிலையி்ல் என்ஜின், வேரியண்ட், நிறங்கள் மற்றும் சிறப்புகளை அறியலாம்.

Citroen Aircross X

5 இருக்கை அல்லது 5+2 இருக்கை என நம் தேவைக்கு ஏற்ப இலகுவாக மாற்றிக் கொள்ளும் வகையில் கிடைக்கின்ற நிலையில், சிறப்பான சஸ்பென்ஷன், சமீபத்தில் பாரத் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங், சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்குவதுடன் பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கின்ற ஏர்கிராஸ் எக்ஸ் ஆனது போட்டியாளர்களை போல சன்ரூஃப்,  ADAS, என பல நவீன வசதிகள் இல்லாமல் இருக்கின்றது.

ஆனால் பட்ஜெட் விலையில் தரமான காராக இருப்பது மிகப்பெரிய பலமாக ஏர்கிராஸூக்கு அமைந்திருந்தாலும், சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் விற்பனை மையங்கள் மிக குறைவாக உள்ளது.

1.2 லிட்டர் NA மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு ஆப்ஷனை பெற்றாலும், சிஎன்ஜி டீலர்கள் மூலம் பொருத்தி தரப்படுகி்றது, ஆனால் டீசல், ஹைபிரிட் போன்ற ஆப்ஷன் கிடையாது.

Citroen Aircross X on-road Price in Tamil Nadu

ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் 1.2NA என்ஜின் ஆன்ரோடு விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.11.74 லட்சம் வரையும், டர்போ மேனுவல் ரூ.14.28 முதல் ரூ.15.73 வரையும், டர்போ ஆட்டோமேட்டிக் ரூ.16.92 லட்சம் முதல் ரூ.17.15 லட்சம் வரை கிடைக்கின்றது. கூடுதலாக மேக்ஸ் வேரியண்டிற்கு ரூ.25,000 செலுத்தி 360 டிகிரி கேமரா பொருத்தி தரப்பட உள்ளது.

விலை Ex-showroom on-road price
1.2l NA You 5 seater ₹ 8,29,000 ₹ 9,98,987
1.2l NA Plus 5 seater ₹ 9,77,000 ₹ 11,73,654
1.2l Turbo Plus MT 7 seater ₹ 11,37,000 ₹ 14,27,543
1.2l Turbo Max MT 7 seater ₹ 12,34,500 ₹ 15,51,543
1.2l Turbo Max MT DT 7 seater ₹ 12,54,500 ₹ 15,73,098
1.2l Turbo Max AT 7 seater ₹ 13,49,100 ₹ 16,92,670
1.2l Turbo Max AT DT 7 seater ₹ 13,69,100 ₹ 17,14,678

கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடு விலையில், காப்பீடு, ஆர்டிஓ மற்றும் ஆர்டிஓ கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை, முழுவிபரங்களுக்கு டீலரை அனுகுங்கள்.

சிட்ரோயன் ஏர்கிராஸ் X விலை

ஏர்கிராஸ் என்ஜின் மற்றும் மைலேஜ் விபரம்

1.2 லிட்டர் NA பெட்ரோல் 82 hp பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்று மைலேஜ் லிட்டருக்கு 14 கிமீ வரை கிடைக்கின்றது.

110 PS பவர் மற்றும் 190Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் ப்யூர்டெக் 110 டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் கொண்ட மாடல் மைலேஜ் லிட்டருக்கு 11கிமீ முதல் 13 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் கொண்ட மாடல் மைலேஜ் லிட்டருக்கு 9 முதல் 12 கிமீ கிடைக்கின்றது.

வேரியண்ட் மற்றும் வசதிகள்

அனைத்து வேரியண்டுகளிலும் பாதுகாப்பு சார்ந்த 6 ஏர்பேக்குகள், ABS உடன் கூடிய EBD, ESP, ஹில் ஹோல்டு கண்ட்ரோல், டயர் பிரெஷர் மானிட்டர் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவை உள்ளது.

You Aircross 5 Seater

  • 16-இன்ச் ஸ்டீல் வீல்
  • முன் மற்றும் பின்புற பவர் ஜன்னல்கள்
  • சாவி இல்லாத நுழைவு
  • மேனுவல் ஏசி
  • மின்சாரத்தால் சரிசெய்யக்கூடிய வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMகள்)
  • டில்ட் ஸ்டீயரிங்
  •  உட்புற ரியர்வியூ கண்ணாடி (IRVM)
  • 7-இன்ச் டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • நான்கு பவர் ஜன்னல்களுக்கும் ஒன்-டச் ஆட்டோ டவுன்

Citroen Aircross x dashboard

Plus Aircross X

கூடுதல் வசதியாக,

  •  க்ரூஸ் கண்ட்ரோல்
  • வீல்-ஆர்ச் மற்றும் பாடி-சைடு சில் கிளாடிங்
  • முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள்
  • LED பகல்நேர ரன்னிங் விளக்குகள் (DRLகள்)
  • ஃபோக் விளக்குகள்
  • கவருடன் கூடிய 17-இன்ச் ஸ்டீல் வீல்
  • கூரை தண்டவாளங்கள்
  • ஷார்க்-ஃபின் ஆண்டெனா
  • கூரையில் பொருத்தப்பட்ட ஏர் வென்ட்கள் (7 இருக்கைகள் மட்டும்)
  • 2வது வரிசை இருக்கை சாய்வு (7 இருக்கைகள் மட்டும்)
  • சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள்
  • ஓட்டுநர் இருக்கை உயரத்தை சரிசெய்யக்கூடியது
  • 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேஆட்டோ
  • எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப்
  • 4 ஸ்பீக்கர்கள்
  • கனெக்டேட் கார் தொழில்நுட்பம்
  • ரியர் டிஃபோகர்

 

Max Aircross X

டாப் வேரியண்டில் டூயல் டோன் ஆப்ஷன் மற்றும் 360 டிகிரி கேமரா ஆப்ஷன் இடம்பெற்று

  • 17-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்
  • லெதர் இருக்கைகள்
  • தோல் போர்த்தப்பட்ட ஸ்டீயரிங்
  • 2 ட்வீட்டர்களுடன் 4 ஸ்பீக்கர்கள்
  • ரியர்வியூ கேமரா
  • சுற்றுப்புற விளக்குகள்
  • ஃபுட்வெல் லைட்டிங்
  • காரா டிஜிட்டல் அசிஸ்டண்ட் (AT மட்டும்)*
  • வென்டிலேட்டேட் இருக்கை

போட்டியாளர்கள்

சி-பிரிவு சந்தையில் கிடைக்கின்ற க்ரெட்டா, ஆஸ்டர், செல்டோஸ், எலிவேட், விக்டோரிஸ், குஷாக், டைகன் , ஸ்கார்பியோ உள்ளிட்ட பல்வேறு மாடல்களுடன் கர்வ் மேலும் ரூ.10-17 லட்சத்துக்குள் கிடைக்கின்ற காம்பேக்ட் எஸ்யூவிகளையும் எதிர்கொள்ளுகின்றது.

Related Motor News

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

ரூ.8.29 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோயன் ஏர்கிராஸ் X விற்பனைக்கு வெளியானது

பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பினை உறுதி செய்த சிட்ரோயன் ஏர்கிராஸ்

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

Citroen Aircross X image Gallery

Citroen Aircross x suv review
Citroen Aircross x suv
சிட்ரோயன் ஏர்கிராஸ் X
2025 new Citroen Aircross x on road price
2025 new Citroen Aircross x side
2025 new Citroen Aircross x
சிட்ரோயன் ஏர்கிராஸ் X விலை
2025 new Citroen Aircross x 360 degree camera 1
2025 new Citroen Aircross x taillight
Citroen Aircross x 6 airbags
Citroen Aircross x automatic
Citroen Aircross x suv
Citroen Aircross x seats
Citroen Aircross x new interior
Citroen Aircross x dashboard
citroen aircross dark edition price
updated 2024 citroen aircross get new engine and more features
Citroen Aircross interior
2024 Citroen Aircross Xplorer Edition features
c3 aircross
citroen c3 aircross suv rear
c3 aircross
citroen c3 aircross suv first look
c3 aircross
citroen c3 aircross suv review
citroen c3 aircross suv rear view

 

Tags: Car on-road priceCitroen AircrossCitroen Aircross XCitroen C3 Aircross
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

No Content Available
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan