ரூ.4.95 லட்சம் விலையில் இனோவா க்றிஸ்ட்டாவுக்கு அற்புதமான கஸ்டமைஸ் வசதிகள்

மும்பையின் டிசி டிசைன் நிறுவனம் ரூ. 4.95 லட்சம் விலையில் விசேஷ கஸ்டமைஸ் ஆப்ஷனை புதிய டொயோட்டா இனோவா க்றிஸ்ட்டா எம்பிவி மாடலுக்கு வழங்கியுள்ளது.

இனோவா க்றிஸ்ட்டா

  • ரூ. 4.95 லட்சத்தில் கூடுதல் வசதிகளை கொண்ட கஸ்டமைஸ் ஆப்ஷன்வழங்கப்படுகின்றது.
  • உயர் ரக பிரிமியம் இன்டிரியர் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
ads

இன்னோவா காரில் இடம்பெற்றுள்ள பின்புற இரண்டு வரிசை இருக்கைகளை முற்றிலும் நீக்கிவிட்டு கூடுதலான வசதிகளுடன் தொலை தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த சொகுசு அம்சங்களை பெற்ற உயர்ரக சொகுசு கார்களுக்கு இணையான வசதிகளை டிசி நிறுவனம் இணைத்துள்ளது.

உயர்தர லெதர்களை கொண்டு விசேஷமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு சாய்மான இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இரு இருக்கைகளுக்கு இடையில் தடுப்பும் தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும் உயர்தர லெதர் மற்றும் மரவேலைப்பாடுகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவர் கேபினுக்கும் பயணிகள் கேபினுக்கும் இடையிலான தடுப்பில் மிக அகலமான தொடுதிரை வசதியுடன் கூடிய பொழுதுபோக்கு சாதனங்கள் சேர்க்கபட்டுள்ளது. இதன் மூலம் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களை பெறலாம்..

இனோவா காரில் மூன்று விதமான என்ஜின்கள் இடம்பெற்றுள்ளது.. அவை..

  1. 150hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4லிட்டர் என்ஜின் டார்க் 343 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ ஆகும்.
  2. 174hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் என்ஜின் டார்க் 360 Nm ஆகும். இதில்  6 வேக ஆட்டோமேட்டிக் இடம் பெற்றிருக்கும். 2.8 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 14.29 கிமீ ஆகும்.
  3. 166 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் டார்க் 245Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

டிசி கஸ்டமைஸ் ஆப்ஷனை முழுமையாக பெற ரூ.4.95 லட்சம் செலவு பிடிக்குமாம்.

Comments