ஹயோசங் அக்குய்லா 250 லிமிடேட் எடிசன் விற்பனைக்கு வந்தது

ரூ.2.94 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ள ஹயோசங் அக்குய்லா 250 லிமிடேட் எடிசன் மாடலில் 100 மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. அக்குய்லா 250 மாடலில் 3 வண்ணங்கள் மட்டுமே கிடைக்க உள்ளது.

ஹயோசங் அக்குய்லா 250

ஸ்பெஷல் எடிசனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹயோசங் அக்குய்லா 250 லிமிடேட் பதிப்பில் வண்ணங்களை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. இந்த பைக்கில் 26.57hp  ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் 21.37Nm டார்க்கினை வழங்கும் வகையிலான 249சிசி என்ஜினை பெற்றுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ads

14 லிட்டர் பெட்ரோல் டேங்க் இடம்பெற்றுள்ள இந்த மாடலில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பெற்று பின்புறத்தில் ஹைட்ராலிக் டபுள் ஷாக் அப்சார்பார்  இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் முன்புற டிஸ்க் பிரேக் அமைப்பினை பெற்றிருப்பதுடன் பின்புறத்தில் டிரம் பிரேக்கினை பெற்று விளங்குகின்றது.

அனைத்து டீலர்களிடமும் கிடைக்க உள்ள அக்குய்லா 250  லிமிடேட் எடிசன் சாதரன மாடலை விட ரூ.11,000 வரை கூடுதலான விலையில் கிடைக்க உள்ளது. ஹயோசங் அக்குய்லா 250 விலை ரூ. ரூ.2.94 லட்சம்  ( எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும்.

 

Comments