Automobile Tamil

விரைவில்.., அதிக ரேஞ்சு வழங்கும் டாடா நெக்ஸான் EV அறிமுகம்

tata nexon ev suv

இந்தியாவின் மிக பிரபலமான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான டாடா நெக்ஸான் EV காரில் கூடுதலான ரேஞ்சு வழங்கும் மாடலை விற்பனைக்கு ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

நீண்ட தூரம் பயணிப்பதற்க்கான நெக்ஸான் மின்சார காரில், பெரிய 40kWh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய நெக்ஸான் EV உடன் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் விற்கப்படும் மின்சார கார்களில் 60 சதவீத சந்தையை நெக்ஸான் கொண்டுள்ளது.

டாடா நெக்ஸான் இவி சிறப்புகள்

விற்பனையில் கிடைக்கின்ற நெக்ஸான் மின்சார காரில் பொருத்தப்பட்டுள்ள 30.2 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 254 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 312 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மாடலை விட 30 சதவீத கூடுதலான 40kWh பேட்டரி திறனை பெற்று 6.6kW AC சார்ஜ,ஐ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதனால், இதன் ரேஞ்சு 400 கிமீ-க்கு கூடுதலாக அமைந்திருக்கலாம்.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற மற்ற மாடல்களான கோனா இவி மற்றும் எம்ஜி இசட்எஸ்இவி கார்களை நேரடியாக எதிர்கொள்ளும். நீண்ட தொலைவு பயணிப்பதற்க்கான நெக்ஸான் EVயின் விலை சுமார் ரூ.17 லட்சம்-18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version