ஃபியட் ஆர்கோ கார் படங்கள் வெளியாகியுள்ளது

2005ல் அறிமுகம் செய்த புன்ட்டோ காருக்கு மாற்றாக பிரேசில் நாட்டில் புதிதாக  ஃபியட் ஆர்கோ மாடலை அறிமுகம் செய்ய உள்ளதால் ஆர்கோ காரின் படங்களை ஃபியட் வெளியிட்டுள்ளது. புதிய ஆர்கோ மிக சிறப்பான வடிவ அம்சங்களை பெற்றிருப்பதுடன் நவீன வசதிகளையும் பெற்றதாக வரவுள்ளது.

ஃபியட் ஆர்கோ கார்

2005 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட புன்ட்டோ காரின் 12 ஆண்டுகால பயணத்தை தொடர்ந்து அதற்கு மாற்றாக புதிய ஆர்கோ ஹேட்ச்பேக் கார் பிரேசில் சந்தையில் முதன்முறையாக விற்பனைக்கு ஜூன் மாதம் வெளியிடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ads

மிக நேர்த்தியான டிசைன் அம்சங்களை கொண்டதாக ஸ்டைலிஷனான முகப்பு விளக்குகள், எல்இடி ரன்னிங் விளக்குகள் உட்பட நேர்த்தியான கிரில் , டைமன்ட் கட் அலாய் வீல் போன்றவை அர்கோ மாடலுக்கு மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் தோற்றத்தை வழங்க உதவுகின்றது. பின்புற அமைப்பிலும் ஸ்டைலான எல்இடி டெயில் விளக்குகள் உள்பட மிக நேர்த்தியான பம்பர் அமைப்பை கொண்டதாக உள்ளது. இன்டிரியர் சார்ந்த படங்களை இதுவரை வெளியிடப்படவில்லை

இந்த மாடலில் மூன்று விதமான பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன் விபரம் பின் வருமாறு.

72hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.0 லிட்டர் எஞ்சின் , 101hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.3 லிட்டர் மற்றும் 135hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.8 லிட்டர் என மூன்று வகையில் கிடைக்கபெறலாம், டீசல் எஞ்சின் பற்றி விபரங்கள் வெளியாகவில்லை.

வருகின்ற ஜூன் மாதம் பிரேசில் நாட்டில் விற்பனைக்கு செல்ல உள்ள ஃபியட் ஆர்கோ கார் இந்தியா வருகை குறித்து எந்த அதிகார்வப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.

Comments