எஸ்யூவி மற்றும் சொகுசு கார்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்ந்தது

ஆட்டோமொபைல் துறைக்கு அடிப்படை வரி 28 சதவிதமாகவும், செஸ் வரி பெரிய மற்றும் ஆடம்பர கார்களுக்கு25 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி உயர்வு

நமது நாட்டின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்கள் , ஜிஎஸ்டி எனப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு இழப்பீடு) அறிவிப்புச் சட்டத்தை 2017 திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து சட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ads

ஆடம்பர சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களுக்கு முந்தைய வரி விதிப்பில் 55 சதவீதமாக இருந்த நிலையில் ஜிஎஸ்டிக்கு பிறகு 43 சதவீதமாக குறைந்த நிலையில் லட்சங்கள் முதல் கோடிகள் வரை கார்கள் மற்றும் எஸ்யூவி விலை குறைந்திருந்தது.

தற்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் நோக்கில் ஆடம்பர கார்கள் மற்றும் எஸ்.யூ.வி மாடல்களுக்கு 43 சதவீதமாக இருந்த நிலையில் , எனவே செஸ் வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.  இந்த வரி விதிப்பு செப்டம்பர் 2, 2017 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் மோட்டார் வாகன துறையில் மற்றொரு கூடுதல் பிரிவாக 13 இருக்கைகள் உள்ள வாகனங்களுக்கும் செஸ் வரி 25 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே ஆடம்ப கார்கள் மற்றும் எஸ்யூவிகள் விலை உயர்ந்துள்ளது.

Comments