ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஸ்போர்ட்டிவ் பைக் விரைவில்

200சிசி ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக  ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஸ்போர்ட்டிவ் நேக்டூ பைக்கினை நிலைநிறுத்த ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டு வருகின்றது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்

கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கில் 18.6 PS ஆற்றலை 8500 rpm மற்றும் 17.2 Nm டார்க்கினை 6000 rpm சுற்றில் வழங்கும் புதிய ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 200cc 4 ஸ்டோர்க் என்ஜினை பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றிருக்கும்.

ads

காட்சிப்படுத்தப்பட்ட மாடலின் தோற்றத்துடன் கூடுதலாக சில ஸ்போர்ட்டிவ் மாறுதல்களை பெற்று இருபக்க டயர்களிலும் டிஸ்க்பிரேக் , ஏபிஎஸ் ஆப்ஷனலாக இடம்பெறலாம். முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரினை பெற்றிருக்கும்.

 

மல்டி ஸ்போக் அலாய் வீல் , எல்இடி பைலட் விளக்கு , ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் , ஹாலெஜன் முகப்பு விளக்கு , டிஜிட்டல் இன்ஸ்டூரூமென்ட் கிளஸ்ட்டரை பெற்று விளங்கும். வரவுள்ள புதிய கேடிஎம் டியூக் 200 பைக்கிற்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தும் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ள ஹீரோ எக்ஸ்டீரிம் 200 எஸ் பைக் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி , பல்சர் 200 ஏஎஸ் போன்ற மாடல்களுடன் சந்தையை பகிர்ந்துகொள்ளும்.

கடந்த சில வருடங்களாக 200சிசி சந்தை மிக வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் நாட்டின் முதன்மையான மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹீரோ 200சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சந்தையில் எந்த மாடலை அறிமுகம் செய்யாமல் உள்ள நிலையில் இந்த மாத இறுதியில் எக்ஸ்ட்ரீம் 200S என்ற பெயரில் அல்லது புதிய பெயரை பெற்றதாக வரக்கூடும் என காடிவாடி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

Comments