16,000 முன்பதிவுகளை அள்ளிய ஹோண்டா டபிள்யூஆர்-வி

இந்தியா ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் ஜாஸ் கார் அடிப்படையிலான ஹோண்டா டபிள்யூஆர்-வி மார்ச் மாதம் ரூ.7.75 லட்சம் தொடக்க விலையில் வெளியிடப்பட்டது. தற்போது 16,000 முன்பதிவுகளை பெற்று அசத்தியுள்ளது.

ஹோண்டா டபிள்யூஆர்-வி

புதிய ஹோண்டா சிட்டி மற்றும் க்ராஸ்ஓவர் ரக ஹோண்டா டபிள்யூஆர்-வி என இருமாடல்களும் ஹோண்டாவின் விற்பனையில் முக்கிய பங்களிக்க தொடங்கியுள்ளது. இரு மாதங்களில் 16,000 முன்பதிவுகளை டபிள்யூஆர்-வி பெற்றுள்ளது. சிட்டி கார் 30,000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை அள்ளியுள்ளது.

ads

ஜாஸ் காரின் அடிப்படை பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய க்ராஸ்ஓவர் ரக மாடலின்  நீளம் 3999மிமீ , அகலம் 1734மிமீ மற்றும் உயரம் 1601மிமீ ஆகும். இந்த காரின் இரு சக்கரங்களுக்கு இடையில் கொடுக்கப்பட்டுள்ள வீல்பேஸ் 2555மிமீ ஆகும்.

என்ஜின்

89 பிஹெச்பி ஆற்றலுடன் 109 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்ப்பெற்றுள்ளது.

  • பெட்ரோல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ ஆகும்.

99 பிஹெச்பி ஆற்றலுடன் 200 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

  • டீசல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.5 கிமீ ஆகும்.

விலை உள்பட மற்ற விபரங்களுக்கு — > ஹோண்டா WR-V

[foogallery id=”16161″]

Comments