Auto Industry

பஜாஜ் ஆட்டோ வளர்ச்சி பாதையில் – 2015

புனே நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2015-2016 நிதி ஆண்டில் சிறப்பான விற்பனை வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. பெர்ஃபாமென்ஸ் ரக ஸ்போர்ட்டிவ் பைக் பிரிவில் பஜாஜ் ஆட்டோ முன்னிலை வகிக்கின்றது.

அவென்ஜர்

2015 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்த நிறுவனமாக பஜாஜ் விளங்குகின்றது. பிளாட்டினா ES100 , பல்சர் ஆர்எஸ்200 , பல்சர் ஏஎஸ்200 , CT100 மற்றும் அவென்ஜர் வரிசை போன்ற மாடல்கள் வெற்றி பெற்றுள்ளன.

பஜாஜ் வளர்ச்சி முக்கிய அம்சங்கள் 2015-2016

  • அதிக எண்ணிக்கை வெற்றி பெற்ற மாடல்கள் அறிமுகம்.
  • பிளாட்டினா ES100  மற்றும் CT100 விற்பனை வளர்ச்சி 23 % முதல் 36 சதவீதமாக கடந்த 9 மாதங்களில் அதாவது 2015-16 நிதி ஆண்டில் பதிவு செய்துள்ளது.
  • 6.81 லட்சம் இருசக்கர வாகனங்களை தொடக்க நிலை கம்யூட்டர் பிரிவில் 9 மாதங்களில் விற்பனை செய்துள்ளது. இதனை போலவே கடந்த ஆண்டில் 3.83 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது கடந்த நிதி ஆண்டை விட 77 சதவீத வளர்ச்சியாகும்.
  • கடந்த இரு மாதங்களில் 1 லடசத்திற்கு குறைவான பிரிவில் அவென்ஜர் 150 குரூஸர் பைக் 53 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
  • பல்சர் RS200 ஸ்போர்ட்டிவ் பைக் 1 லட்சத்துக்கு மேலான விலையில் சிறந்த விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த மாடலாகும்.

 

  • அவென்ஜர் 150 , அவென்ஜர் 220 குரூஸ் மற்றும் அவென்ஜர் 200 ஸ்டீரிட் போன்ற மாடல்கள் டிசம்பர் மாதம் 20,000 பைக்குகள் விற்பனை ஆகி புதிய மைல்கல்லை எட்டியது.

 

  • மேலும் அவென்ஜர் பைக்கின் உற்பத்தியை அதிகரிக்கவும் வரும் மார்ச் 2016க்குள் மாதம் 30,000 பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்னைத்துள்ளது.

 

  • மேலும் டிஸ்கவர் பிராண்டுக்கு மாற்றாகவோ அல்லது புதிய பிராண்டிலோ கம்யூட்டர் பைக் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

ஹீரோ மற்றும் ஹோண்டா போன்ற முன்னனி நிறுவனங்கள் இந்த நிதி ஆண்டில் தொடக்கநிலை 100-110சிசி சந்தையில் சரிவினை சந்தித்திருந்தாலும் பஜாஜ் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 , ஏஎஸ்200 என இரண்டு பைக்குகளையும் சமாளிக்க டிவிஎஸ் அப்பாச்சி 200 எதிர்கொள்ளவுள்ளது. மேலும் விக்டர் பைக் மீண்டும் விற்பனைக்கு வருகின்றது.

Share
Published by
MR.Durai
Tags: Bajaj