பொலிரோ என்றுமே எஸ்யூவி கார்களின் ராஜா

மீண்டும் மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி கடந்த அக்டோபர் மாதத்தில் க்ரெட்டா எஸ்யூவியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்துள்ளது. 7754 பொலிரோ கார்கள் அக்டோபரில் விற்பனை ஆகியுள்ளது.
மஹிந்திரா பொலிரோ

க்ரெட்டா விற்பனைக்கு வந்த சில நாட்களிலே சிறப்பான வரவேற்பினை பெற்று கடந்த இரண்டு மாதங்களாக டாப் 10 கார்களில் முதலிடத்தை பிடித்திருந்தது. பண்டிகை காலத்தில் பொலிரோவின் கை ஓங்கியுள்ளது.

முதல் 10இடங்களில் மஹிந்திரா பொலிரோ , ஸ்கார்ப்பியோ , எக்ஸ்யூவி 5OO மற்றும் புதிய டியூவி 3OO போன்றவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

7225 க்ரெட்டா கார்கள் அக்டோபர் மாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பொலிரோ 7754 கார்கள் விற்பனையாகி முதலிடத்தை மீண்டும் பெற்றுள்ளது.

ஈக்கோஸ்போர்ட்டை வீழ்த்திய டியூவி300

விற்பனைக்கு வந்த இரண்டு மாதங்களில் தொடர்ந்து ஈக்கோஸ்போர்ட் காரை வீழ்த்தி டியூவி300 முன்னிலை வகித்து வருகின்றது. கடந்த அக்டோபரில் 3417 ஈக்கோஸ்போர்ட் கார்கள் விற்பனை ஆகியுள்ளது. 4551 கார்களை மஹிந்திரா டியூவி300 விற்பனை செய்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20,255 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த அக்டோபரில் 24,060 கார்களை விற்பனை செய்து 19 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Mahindra Bolero regains No.1 position

Exit mobile version