Automobile Tamilan

சென்னை ரெனோ-நிசான் 10 லட்சம் கார்கள் உற்பத்தி

சென்னை ரெனோ-நிசான் கூட்டனி ஆலையில் 1 மில்லியன் கார்கள் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. ஓரகடத்தில் அமைந்துள்ள ரெனோ நிசான் கூட்டு ஆலை ரூ.45 பில்லியன் மதிப்பில் மார்ச் 2010 முதல் செயல்பட்டு வருகின்றது.

Renault-2BLodgy-2BIndia
ரெனோ லாட்ஜி

ரெனோ-நிசான் கூட்டுதொழிற்சாலையில் 32 விதமான மாடல்கள் ரெனோ , நிசான் மற்றும் டட்சன் பிராண்டுகளில் தயாரிக்கப்படுகின்றது. இவை இந்திய மட்டுமல்லாமல் 2010ஆம் ஆண்டு முதல் இதுவரை 6 லட்சம் கார்களை  106 வெளிநாடுகளுக்கு சென்னையிலிருந்து ஏற்றுமதி செய்துள்ளது.  இந்தியாவின் இரண்டாவது மிகப்பெறிய ஏற்றுமதியாளராக ரெனால்ட் நிசான் விளங்குகின்றது.  2010 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 75,000 வாகனங்கள் என தொடங்கிய உற்பத்தி கடந்த மார்ச் 2015யில் 2 லட்சம் என உயர்வு பெற்றது.

இதுகுறித்து இந்தியா , மத்திய கிழக்கு மற்றும் ஆப்பரிக்கா போன்றவைகளின் நிசான்  பிரிவு சேர்மேன் கிரிஸ்டின் மாரடரஸ் தெரிவிக்கையில் சென்னை பனியாளர்களுக்கு என் பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் . இந்த வெற்றி அவர்களால் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் சென்னை ரெனோ-நிசான் இந்திய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனமாக உயர்வடைந்துள்ளது. நிசான் மற்றும் ரெனோ மாடல்கள் இந்திய மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. இதற்கு காரணம் பணியாளர்கள் மற்றும் உறுதுனையாக விளங்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள கூட்டனி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் இந்தியாவிலே இருந்து பல பாகங்களை உற்பத்தி செய்து குறைவான விலையில் தரமான காராக உற்பத்தி செய்யப்பட்ட ரெனோ க்விட் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

Exit mobile version