கடந்த பிப்ரவரி 2017 மாதந்திர முடிவில் விற்பனையில் டாப் 10 கார்கள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.  மாருதி நிறுவனத்தின் ஆல்ட்டோ முதலிடத்தில் இருந்தாலும் ஸ்விஃப்ட் காரை வீழ்த்தி ஹூண்டாய் கிராண்ட் ஐ10 4வது இடத்தை கைபற்றியுள்ளது.

 விற்பனையில் டாப் 10 கார்கள்

கடந்த பிப்ரவரி மாத முடிவில் பெரும்பாலான முன்னணி கார்களின் விற்பனை சற்று சரிவிலே காணப்படுகின்றது. குறிப்பாக மாருதி நிறுவனத்தின் ஆல்ட்டோ , டிசையர் , ஸ்விஃப்ட் போன்றவை ஆகும். புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் சர்வதேச அளவில் பல நாடுகளில் விற்பனைக்கு சென்று உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாத முடிவில் 4வது இடத்தை இழந்த ஸ்விஃப்ட் புதிய கிராண்ட் ஐ10 காரின் வரவினால் பின்தங்கி உள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும்மாடல்களில் ஒன்றான ஆல்டோ கார் மாதந்தோறும் சராசரியாக 20,000 கார்களை கடக்கும் நிலையில் இருந்த வந்த ஆல்ட்டோ 19,524 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. ஆல்ட்டோ காருக்கு போட்டியாக க்விட் அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.

எஸ்யூவி மாடல்களில் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா மாடல்களும் இடம்பெற்றுள்ளது.

முழுமையான பட்டியலுக்கு கீழுள்ள படத்தில் காணலாம்.,…