விற்பனையில் டாப் 10 பைக்குகள் – மே 2016

1 Min Read

கடந்த மே மாத இரு சக்கர வாகன விற்பனையில் முன்னனி வகித்த டாப் 10 பைக்குகள் பற்றி இந்த செய்தி பகிர்வில் தெரிந்துகொள்ளலாம்.  ஆக்டிவா ஸ்கூட்டர் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக முதலிடத்தினை பெற்று வருகின்றது.

bajaj-pulsar-rs200

முதல் 10 இடங்களை பிடித்துள்ள பட்டியலில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 4 பைக் மாடல்கள் இடம்பிடித்துள்ளது.ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா மற்றும் சிபி ஷன் இடம்பிடித்துள்ளது.மேலும் டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் சூப்பர் மொபட் மற்றும் ஜூபிடர் கூடுதலாக பஜாஜ் நிறுவனத்தின் சிடி பைக் மற்றும் பல்சர் வரிசை பைக்குகள் இடம்பெறுள்ளன.

கடந்த மாத விற்பனை நிலவரத்துடன் ஒப்பீடுகையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது.அதனை தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் சூப்பர் மொபட் நல்ல வரவேற்பினை பெற்ற மாடலாக விளங்கி வருகின்றது. மேலும் ஹீரோ கிளாமர் மற்றும் ஜூபிடர் போன்றவை வளர்ச்சி அடைந்துள்ளது.

 

டாப் 10 பைக்குகள் மே 2016

 மாடல் விபரம்  மே 2016
1ஹோண்டா ஆக்டிவா 2,37,317
2ஹீரோ ஸ்பிளெண்டர்2,07,010
3ஹீரோ HF டீலக்ஸ்1,12,273
4ஹீரோ பேஸன்97,882
5டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்75,406
6ஹீரோ கிளாமர்74,590
7 ஹோண்டா சிபி ஷைன்56,818
8பஜாஜ் சிடி10051,893
9   பஜாஜ் பல்சர்46,307
10   டிவிஎஸ் ஜூபிடர்43,867

பட்டியல் முழுமையாக கான; automobiletamilan.com

[irp posts=”7870″ name=”விற்பனையில் டாப் 10 கார்கள் – மே 2016″]

Share This Article
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.