Site icon Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஏப்ரல் 2016

கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் முன்னிலை வகிக்கும் டாப் 10 ஸ்கூட்டர்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். ஹீரோ டூயட் மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது.

ஏப்ரல் 2016யில் இருசக்கர வாகன பிரிவில் முதலிடத்தினை பிடித்த ஹோண்டா ஆக்டிவா 2,33,935 ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளது. அதனை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் 43,256 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்ப்பட்டுள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ டூயட் , மேஸ்ட்ரோ எட்ஜ் போன்ற ஸ்கூட்டர்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. ஹீரோ டூயட் ஏப்ரல் மாத விற்பனையில் 39,371 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஏப்ரல் 2016

 மாடல் விபரம்  ஏப்ரல் 2016
1  ஹோண்டா ஆக்டிவா 2,33,935
2 டிவிஎஸ் ஜூபிடர் 43,256
3 ஹீரோ டூயட் 39,371
4 ஹீரோ மேஸ்ட்ரோ 35,445
5 யமஹா ஃபேசினோ 21,604
6 சுசூகி ஆக்செஸ் 17,592
7 ஹோண்டா டியோ 15,201
8 ஹோண்டா ஏவியேட்டர் 10,547
9 ஹீரோ பிளஸர் 8,790
10 யமஹா ரே 8,665

ஹீரோ பிளஸர் ஸ்கூட்டரின் விற்பனை கடந்த காலத்தை விட குறைந்த எண்ணிக்கையிலே உள்ளது. மேலும் யமஹா ஃபேசினோ ஸ்கூட்டர் நல்ல வளர்ச்சியை பெற்று வருகின்றது.

மேலும் வாசிக்க ; விற்பனையில் டாப் 10 கார்கள் ஏப்ரல் 2016

விற்பனையில் டாப் 10 பைக்குகள் ஏப்ரல் 2016

 

Exit mobile version