ஹீரோ 67 லட்சம் பைக்குகள் விற்பனை சாதனை – 2016

கடந்த ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2016 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஹீரோ 67 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து 6 மில்லியன் வாகனங்கள் இலக்கினை ஹீரோ கடந்துள்ளது.

 

ஹீரோ சந்தை நிலவரம்

2015 ஆம் ஆண்டை விட 4.3 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ள ஹீரோ 64,86,103 இருசக்கர வாகனங்களை 2015யில் விற்பனை செய்திருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டில் 67,62,890 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஹீரோ நிறுவனம் 4 முறை 6 லட்சம் வாகனங்களை மாதந்திர விற்பனையில் கடந்தும் ,  ஹீரோ நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு மாடலாக ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 மற்றும் அச்சீவர் 150 பைக்குகள் விற்பனைக்கு வந்தது. மேலும் 125சிசி பைக் சந்தையில் ஹீரோ கிளாமர் பைக் அபரிதமான சந்தையை பெற்று ஹோண்டா ஷைன் மாடலை பின்னுக்கு தள்ளியுள்ளது. 100சிசி முதல் 125சிசி வரையிலான சந்தையில் முன்னனி இடத்தை ஹீரோ நிறுவனம் தொடர்ந்து தக்க வைத்துள்ளது.

கடந்த டிசம்பர் 2016 மாதந்திர இருசக்கர வாகன விற்பனையில் 34 சதவீத சரிவினை ஹீரோ மோட்டோகார்ப் பெற்றுள்ளது. செல்லாத நோட்டு பிரச்சனையின் காரணமாகவே இந்த சரிவினை சந்தித்துள்ளது. 330,202 இருசக்கர வாகனங்களை மட்டுமே 2016 டிசம்பர் மாதம் விற்பனை செய்துள்ள ஹீரோ கடந்த 2015 டிசம்பர் மாதம் 449,665 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

Exit mobile version