Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2019 ஆம் ஆண்டின் டாப் 10 கார்கள்.. முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்

by MR.Durai
8 January 2020, 7:32 am
in Auto Industry
0
ShareTweetSend

மாருதி டிசையர்

2019 ஆம் ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்திருந்தாலும், ஒரு சில நிறுவனங்கள் சீரான விற்பனையை பதிவு செய்துள்ளது. குறிப்பாக மாருதி சுசுகி விற்பனை கடுமையாகவே பாதிப்படைந்துள்ளது. இந்தியாவிற்கு புதிய நிறுவனங்களான எம்ஜி மோட்டார் மற்றும் கியா மோட்டார்ஸ் கார்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன.

ஆல்ட்டோ கார் தொடர்ந்து விற்பனையில் முன்னணி வகிக்கும் நிலையில், தற்போது கூடுதலான விலை கொண்ட மாடல்கள் மீதான மக்கள் கவனம் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்பதனை டிசையர் விற்பனை உறுதி செய்துள்ளது. மாருதி டிசையர் கார் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 657 கார்களை விற்பனை செய்து நாட்டின் முதன்மையான காராக விளங்குகின்றது.

வேன் ரக கார்களில் மாருதி ஆம்னி வெளியேறிய நிலையில் அதனை மாருதி ஈக்கோ தக்கவைத்துக் கொண்டுள்ளது. பலேனோ, ஸ்விஃப்ட், வேகன் ஆர் போன்ற கார்களும் தங்கள் பங்கினை சிறப்பாக கொண்டுள்ளது. மாருதியை தவிர டாப் 10 கார்கள் பட்டியலில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா எஸ்யூவி இடம்பெற்றுள்ளது.

எஸ்யூவி ரக மாடல்களில் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 1 லட்சத்து 31 ஆயிரத்து 732 கார்களும், கிரெட்டா எஸ்யூவி 99 ஆயிரத்து 736 யூனிட்டுகளை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – 2019

வ.எண் தயாரிப்பாளர்/மாடல்  2019
1. மாருதி சுசுகி டிசையர் 2,09,657
2. மாருதி சுசுகி ஆல்ட்டோ 2,08,087
3. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 1,91,900
4. மாருதி சுசுகி பலேனோ 1,83,863
5. மாருதி சுசுகி வேகன்ஆர் 1,55,967
6. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 1,31,732
7. ஹூண்டாய் எலைட் ஐ20 1,23,181
8 மாருதி சுசூகி ஈக்கோ 1,14,105
9. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 1,02,693
10. ஹூண்டாய் கிரெட்டா 99,736

 

22c29 maruti suzuki wagon r rear

Related Motor News

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

ஜூலையில் டாப் இடத்தை கைப்பற்றிய பஞ்ச் இந்தியாவின் 10 கார்கள்

5,000 யூனிட்டுகளை கூட விற்பனை செய்ய இயலாத கார் நிறுவனங்கள்

ஏப்ரல் 2024 மாதந்திர விற்பனையில் சிறந்த 25 கார்கள் பட்டியல்..!

Tags: Top 10 cars
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero splendor 125 million edition fr

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள்

hyundai ev suv

எம்பிவி, EV, ஜெனிசிஸ் பிராண்டு அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாய் இந்தியா

160 கிமீ ரேஞ்சுடன் மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

ஃபிளிப்கார்ட்டில் ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளை வாங்கலாம்.!

பட்ஜெட் விலையில் ஹூண்டாய் எலக்ட்ரிக் எஸ்யூவி 2027ல் அறிமுகம்

சிம்பிள் எனர்ஜியின் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட மேக்னட் இல்லாத மோட்டார்.!

25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த மஹிந்திரா அர்ஜூன் டிராக்டர்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் இலவச மருத்துவ சிகிச்சை – நிதின் கட்கரி

1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan