3 மில்லியன் வாகன உற்பத்தியை கடந்து சுசுகி சாதனை

இந்தியாவில் சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் 3 மில்லியன் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை குருகிராம் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. ஜிக்ஸெர் மற்றும் ஆக்செஸ் 125 மாடல்கள் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.

 சுசுகி மோட்டார்சைக்கிள்

ஆண்டுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டுள்ள குருகிராம் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் குருகிராம் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாகவே கனிசமான விற்பனை அதிகரிப்பை தொடர்ந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை வழங்கி வருகின்ற சுசுகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாடலாக விளங்கி வருகின்து. இதுதவிர, ஸ்கூட்டர் சந்தையில் 125சிசி பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற ஆக்செஸ் 125 அபரிதமான வரவேற்பினை தொடர்ந்து தக்கவைத்து கொண்டுள்ளது. இந்தியாவில் பிரசத்தி பெற்ற சூப்பர் பைக் மாடல்களில் மிக முக்கியமான மாடலாக ஹயபுஸா விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தியாவின் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் உலக பிரசத்தி பெற்ற ஹயபுஸா சூப்பர்பைக் மாடல் முதல் ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் வரை இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகின்றது என்பது குறிப்பிடதக்கதாகும்.

Exit mobile version