பஜாஜ் ஆட்டோவின் உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வெளியிடப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் கடந்திருந்தாலும் ஃப்ரீடம் 125 ஒட்டுமொத்த எண்ணிக்கை 66,836 ஆக வாகன தரவுகளின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 1446 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 1386 வட்டாரங்களின் வாகன தரவுகளின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டில் 38,040 மற்றும் நடப்பு 2026-ல் 28,796 ஆக மட்டுமே பதிவு செய்துள்ளது.
அறிமுகத்தின் பொழுது மிக சிறப்பான வரவேற்பினை பெற்றாலும், சிஎன்ஜி ஃபில்லிங் பிரச்சனையின் காரணமாக பல்வேறு இடங்களில் சிக்கல்களை எதிர்கொண்டாலும், நகர்ப்புறங்களில் சிஎன்ஜி மையங்கள் பரவலாக இருந்தாலும், தொடர்ந்து வரவேற்பினை தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை என்பதே உண்மை.!
330 கிமீ ஒட்டுமொத்த மைலேஜ் கிடைக்கும் என குறிப்பிட்டிருந்தாலும், உண்மையான மைலேஜ் சிஎன்ஜி முறையில் 80 முதல் 85 கிமீ வரையும், பெட்ரோல் முறையில் 55-60 கிமீ வரை வழங்குகின்றது.
தற்பொழுது ஃபீரிடம் 125 சிஎன்ஜியின் விலை ரூ.90,976 முதல் ரூ.1,10,976 வரை எக்ஸ்-ஷோரூம் விலை உள்ளது.