இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையின் முதல் 10 இடங்களில் தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனத்தின் மாடல்கள் 8 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் எர்டிகா ஆகஸ்ட் 2025 விற்பனையில் 18,445 எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது.
மாருதி தவிர இந்த பட்டியிலில் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் டாடா நெக்ஸான் இடம்பெற்றுள்ளது.
Rank | Car Model | August 2025 |
---|---|---|
1 | Maruti Suzuki Ertiga | 18,445 |
2 | Maruti Suzuki Dzire | 16,509 |
3 | Hyundai Creta | 15,924 |
4 | Maruti Suzuki Wagon R | 14,552 |
5 | Tata Nexon | 14,004 |
6 | Maruti Suzuki Brezza | 13,620 |
7 | Maruti Suzuki Baleno | 12,549 |
8 | Maruti Suzuki Fronx | 12,422 |
9 | Maruti Suzuki Swift | 12,385 |
10 | Maruti Suzuki Eeco | 10,785 |
செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் புதிய ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வரவுள்ளதால், சிறிய ரக கார் சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதனால் மிக வலுவான வளர்ச்சியை பெற வாய்ப்புள்ளது.
குறிப்பாக நடுத்தர எஸ்யூவி சந்தையில் க்ரெட்டா எஸ்யூவி அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள சந்தையில் பிரெஸ்ஸா மற்றும் நெக்ஸான் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வருகின்றது.