இந்தியாவில் ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்த நிலையில் செப்டம்பர் 2025 மாதந்திர பயணிகள் கார் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள கார்களில் டாடா நெக்ஸான் எஸ்யூவி 22,573 யூனிட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளது.
டாப் 10 கார்களில் 5 மாடல்கள் எஸ்யூவி பிரிவில் உள்ள நெக்ஸான், க்ரெட்டா, பஞ்ச், பிரெஸ்ஸா மற்றும் ஸ்கார்ப்பியோ மாடலும் உள்ள நிலையில், மாருதியின் டிசையர், எர்டிகா, பிரெஸ்ஸா, வேகன் ஆர், பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் என 6 மாடல்கள் முதல் 10 இடங்களில் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா, மஹிந்திராவின் ஸ்கார்பியோ மற்றும் டாடாவின் நெக்ஸான் மற்றும் பஞ்ச் உள்ளன.
வரிசை | கார் மாடல் | விற்ற யூனிட்கள் |
---|---|---|
1 | டாடா நெக்ஸான் | 22,573 |
2 | மாருதி சுசூகி டிசையர் | 18,412 |
3 | மாருதி சுசூகி எர்டிகா | 17,856 |
4 | மாருதி சுசூகி வேகன் ஆர் | 16,789 |
5 | ஹூண்டாய் க்ரெட்டா | 15,623 |
6 | டாடா பஞ்ச் | 15,235 |
7 | மாருதி சுசூகி பிரெஸ்ஸா | 14,567 |
8 | மாருதி சுசூகி ஸ்விஃப்ட் | 13,892 |
9 | மஹிந்திரா ஸ்கார்பியோ N | 12,456 |
10 | மாருதி சுசூகி பலேனோ | 11,789 |
குறிப்பாக நெக்ஸான் சந்தையில் அமோகமான வரவேற்பினை பெற்ற முந்தைய மாதங்களை விட மிகவும் , அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.