நீண்ட காலமாக இந்திய சந்தையில் களமிறங்க திட்டமிட்டு வந்த சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் இறுதியாக, ஹவால் (Haval) என்ற தனது பிராண்டின் மூலம் முதல் காரை 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஆலையை கொண்டுள்ள இந்நிறுவனம் எஸ்யூவி மற்றும் பிக்கப் டிரக் தயாரிப்பில் பிரபலமாக சீனாவில் விளங்கி வருகின்றது.
குஜராத்தின் சனந்தில் உள்ள வாகன உற்பத்தி மண்டலத்தில் தனது முதல் உற்பத்தி ஆலையை அமைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாநில அரசு நிலத்தை ஒதுக்குவதன் மூலம் முன் நிபந்தனைகளை நிறைவேற்றியது. எனவே, ரூ.7,000 கோடி முதலீட்டை உறுதி செய்துள்ளது.
கிரேட் வால் மோட்டார்ஸ் ஹவால் என்ற பெயரில் இந்தியாவில் வர வாய்ப்புள்ளது. மேலும், தலைமையகம் ஹரியானாவின் குருகிராமில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பெரும்பாலும் தங்கள் எஸ்யூவிகளை இந்த பெயரில் விற்கிறார்கள். அவர்களிடம் அடுத்தடுத்த மற்றொரு பிராண்டான வெய் (wey) என்ற பெயரில் உள்ளது. இது ஆடம்பர கார்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ஐசி என்ஜின் வாகனங்கள் இரண்டின் உற்பத்தியும் இந்த ஆலையில் நடைபெறும். மேலும், இந்நிறுவனம் பல்வேறு நவீனத்துவமான டெக்னாலாஜி சார்ந்த அம்சங்களை கொண்டு தங்கள் மாடலை வெளியிட வாய்ப்புள்ளது.
வரவிருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் வாகன உற்பத்தியாளர் Haval பிராண்ட் திறனையும் அவற்றின் சில தயாரிப்புகளையும் காட்சிப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கிறோம்.
எஸ்ஏஐசி குழுமத்தின் எம்ஜி மோட்டார் நிறுனத்தை தொடர்ந்து இந்தியாவில் கிரேட் வால் மற்றும் சாங்கன் ஆட்டோமொபைல் நிறுவனமும், வால்வோ நிறுவனத்தின் தலைமையான சீனாவின் Geely நிறுவனமும் புரோட்டான் என்ற குறைந்த விலை கார் பிராண்டினை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு வருகின்றது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…