Automobile Tamilan

தமிழகத்தில் முதலீடு செய்யும் மோட்டார் நிறுவனங்கள் : உலக முதலீட்டாளர்கள் மாநாடு

2019 உலக முதலீட்டாளர் மாநாட்டில், தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ள மோட்டார் நிறுவனங்கள் குறித்தான விபரத்தை அறிந்து கொள்ளலாம். முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

2019 உலக முதலீட்டாளர் மாநாடு

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பாளர்களின் மையமாக விளங்குகின்ற, தமிழகத்தில் சர்வதேச அளவில் பல்வேறு முன்னணி மோட்டார் வாகன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் முதலீடு மேற்கொள்ள உள்ள நிறுவனங்கள் தொடர்பான இரண்டு நாட்கள் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் வாயிலாக சுமார் 10 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் நிகழ்வில் ரூ.1300 கோடி முதலீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ள ஃபோர்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாவது பெரிய ஃபோர்டு ஆராய்ச்சி மையமாக 28 ஏக்கர் பரப்பளவில் வளாகம் அமைந்துள்ளது.

தமிழகத்தின் மோட்டார் உற்பத்தி திறன்

2017-2018 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45 சதவீத பங்களிப்பை தமிழ்நாடு கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த நிதி வருடத்தின் கார் உற்பத்தி திறன் 1.64 மில்லியன் , உற்பத்தி எண்ணிக்கை 1.09 மில்லியன் ஆகும். இவற்றில் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள் எண்ணிக்கை ஆகும்.

வர்த்தக வாகன உற்பத்தி திறன் 2,18,000 , உற்பத்தி செய்யப்பட்ட எண்ணிக்கை 1,08,524 மற்றும் ஏற்றுமதி 22,814 எண்ணிக்கை ஆகும்.

இரு சக்கர வாகன உற்பத்தி திறன் 4.82 மில்லியன், உற்பத்தி செய்யப்பட்ட எண்ணிக்கை 3.18 மில்லியன் மற்றும் ஏற்றுமதி எண்ணிக்கை 7 லட்சம் ஆகும்.

உலக மூதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள மோட்டார் நிறுவனங்கள் பட்டியல் பின் வருமாறு;-

1 . ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் , நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் நிறுவனமாகும். இந்நிறுவனம் சுமார் ரூபாய் 7000 கோடி முதலீட்டை எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மேற்கொள்ள உள்ளது.

2. பிரான்ஸ் நாட்டின் பி.எஸ்.ஏ நிறுவனம், பியாஜியோட் கார்களை உற்பத்தி செய்ய ரூபாய் 1250 கோடி முதலீட்டை திருவள்ளூவர் மாவட்டத்தில் மேற்கொள்கின்றது.

3. ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் தலைமையான ஐசர் மோட்டார்ஸ், தனது விரிவாக்க பனிகளுக்கு ரூ.1500 கோடியை முதலீடு செய்கின்றது.

5. டயர் தயாரிப்பில் ஈடுப்பட்டு வரும் எம்ஆர்எஃப் நிறுவனம், வேலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலைகளை விரிவாக்குவதற்கு சுமார் ரூபாய் 3100 கோடி முதலீட்டை மேற்கொள்கிறது.

மேலும் , சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் மட்டும், சுமார் 12,000 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.39,000 கோடியாகும். இவற்றில் சில மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளன.

Exit mobile version