உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெக் மையம் ஜெர்மனியில் உள்ள முனிச் அருகே திறக்கப்பட்டுள்ளது. Hero Tech Center Germany GmbH என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவை தவிர்த்த மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ஜெர்மனி நாட்டில் உள்ள முனிச் நகரின் அருகாமையில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் ஹோண்டா நிறுவனம் பிரிந்த பின்னர், தொழிற்நுட்பம் சார்ந்த மேம்பாடுகளுக்கான Center of Innovation and Technology (CIT) மையத்தை 2016 ஆம் ஆண்டில் ஜெயப்பூரில் தொடங்கியது.
இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200, எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T உள்ளிட்ட மாடல்கள் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்து வரவுள்ள பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு என தொடங்கப்பட்டுள்ள ஹீரோ டெக் மையத்தின் தலைமை அதிகாரியாக டெக்னாலஜி அதிகாரி மார்கஸ் நிர்வகிப்பார்.
இந்த மையத்தில் வரவுள்ள பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள் மாடல்கள் மற்றும் டாக்கர் ரேலிக்கான ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் டீம் ரேலி மாடல்களை உற்பத்தி செய்ய மற்றும் நுட்பம் சார்ந்த மேம்பாடுகளை வழங்க இந்த மையம் செயற்படுத்தப்பட உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…