ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம், மே 2023-ல் மொத்தம் 3,29,393 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மே 2022 விற்பனை செய்யப்பட்ட 3,52,893 உடன் ஒப்பீடுகையில் 9 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக இந்நிறுவனத்தின் டியோ, யூனிகார்ன், சிடி110, லிவோ உள்ளிட்ட மாடல்கள் புதிய OBD-2 மற்றும் E20 மேம்பாடுகளை பெற்ற மாடலின் விற்பனைக்கு அடுத்த சில நாட்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹெச்எம்எஸ்ஐ நிறுவனம் உள்நாட்டு சந்தையில் 3,11,144 எண்ணிக்கையிலும் மற்றும் மே 2023-ல்18,249 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 32,036 வாகனங்களாக இருந்த ஏற்றுமதி 18,249 ஆக குறைந்துள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதத்தில் தனது சமீபத்திய பயணிகள் மோட்டார் சைக்கிளான ஷைன் 100 மாடலை ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் அறிமுகப்படுத்தியது.