கியா இந்தியாவின் எம்பிவி ரக காரன்ஸ் கிளாவிஸ் மற்றும் காரன்ஸ் கிளாவிஸ் EV என இரண்டும் சுமார் 21,000 முன்பதிவுகளை கடந்துள்ள நிலையில், EV மட்டும் 1000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இந்த மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று
எலக்ட்ரிக் மற்றும் ICE என இரு மாடல்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் வசதிகளை பகிர்ந்த் கொண்டிருக்கின்ற நிலையில் ICE முறை கிளாவிஸ் ரூ.11.50 லட்சம் தொடங்கி தோராயமாக ரூ. 21.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. அடுத்து, Clavis EV ரூ.17.99 லட்சத்தில் தொடங்கி ரூ. 24.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கின்றது.
கியா இந்தியாவின் தலைமை விற்பனை அதிகாரி திரு. ஜூன்சு சோ, புக்கிங் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
“எங்கள் கேரன்ஸ் கிளாவிஸ் மற்றும் கிளாவிஸ் EV மாடல்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வலுவான தேவை வாடிக்கையாளர்கள் கியா மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும், மேலும் எங்கள் வாகனங்களில் புதுமை, பாதுகாப்பு மற்றும் வசதியைக் கொண்டுவருவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.”
“ICE மற்றும் EV மாடல்கள் இரண்டும் இந்திய நுகர்வோருடன் மிகவும் வலுவாக வரவேற்பினை பெற்றுள்ளதால் நாங்கள் பெருமைப்படுகிறோம், இது இந்தப் பிரிவில் கியாவின் தலைமையை உறுதிப்படுத்துகிறது.”
கிளாவிஸின் எலக்ட்ரிக் 42Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் 135Hp பவர் வெளிப்படுத்தும் நிலையில் டார்க் 255Nm வெளிப்படுத்தும் நிலையில் 404 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் பெற்றுள்ளது. சார்ஜிங் நேரம் 11kw AC விரைவு சார்ஜர் மூலம் 10-100 % பெற 4 மணி நேரம் போதுமானதாகும்.
ER வேரியண்டில் உள்ள 51.4Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் 171hp பவர் வெளிப்படுத்தும் நிலையில் டார்க் 255Nm வெளிப்படுத்தும் நிலையில் 490 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் பெற்றுள்ளது. சார்ஜிங் நேரம் 11kw AC விரைவு சார்ஜர் மூலம் 10-100 % பெற 4 மணி நேரம் 45 நிமிடங்கள் போதுமானதாகும்.